கிரீன் ஆப்பிள் சாப்பிடுவதால் முக்கிய பயன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 100 கிராம் கிரீன் ஆப்பிளில் உள்ள சத்துகள் தெரிந்துகொள்ளலாம்.
கலோரிகள் – 52
கார்போஹைட்ரேட்- 14 கிராம்
நார்சத்து- 2.7 கிராம்
சர்க்கரை – 10 கிராம்
புரத சத்து- 0.3 கிராம்
வைட்டம்ன் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் பி.காம்பிள்கஸ், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, பொட்டாஷியம், மெக்னீஷியம், காப்பர், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது.
இதில் உள்ள வைட்டமின் சி அளவு, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆண்டி ஆக்ஸிடண்டை தருகிறது. இதில் உள்ள நார்சத்து ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். இது ஜீரணத்திற்கு உதவியாக இருந்து, மலச்சிக்கலை குறைக்கிறது. வைட்டமின் ஏ நமது கண் பார்வையை பலப்பத்தும். கண்ணை பாதிக்கும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். இதில் உள்ள பொட்டாஷியம் இதய செயல்பாடுகளை பார்த்துகொள்ளும். மேலும் ரத்த அழுத்தம் குறையும். இதில் குறைந்த கலோரிகள், நார்சத்து இருப்பதால் உடல் எடை குறைக்க உதவும். மாசமான பெண்களும் இதை சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“