Nutrition expert shares about caffeine consumption
நம்மில் பலர் காலையை காபி அல்லது டீயுடன் தொடங்குகிறோம், அதை நாள் முழுவதும் விரும்புகிறோம். சில நேரங்களில், இரவில் கூட. இருப்பினும், அதிகப்படியான காஃபின் உட்கொள்வது நல்ல யோசனையல்ல என்பது நிபுணர்களின் கருத்து.
Advertisment
உணவியல் நிபுணர் மனிஷா மேத்தா சில உண்மைகளைப் பகிர்ந்து கொண்டார், நிறைய டீ அல்லது காபி அல்லது காஃபின் அடிப்படையிலான பானங்களை உட்கொள்பவர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.
"நான் உங்களை முழுவதுமாக நிறுத்தச் சொல்லவில்லை, ஆனால் நீங்கள் ஒரு காபி பிரியர் என்றால் சில உண்மைகளைத் தெரிந்து கொள்வது நல்லது என்று அவர் இன்ஸ்டாகிராமில் கூறினார்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே
Advertisment
Advertisements
*தேநீர்/காபி என்பது உங்கள் உடலில் எபிநெஃப்ரைனை (epinephrine) வெளியிட உதவுவதன் மூலம் உங்களை விழிப்புடன் இருக்கச் செய்கிறது. இருப்பினும் இது குறுகிய காலமே நீடிப்பதால், உங்களுக்கு இன்னும் அதிகமாக டீ/ காபி தேவைப்படும்.
*உங்கள் உணவுக்கு சிறிது நேரம் முன் எடுத்துக் கொள்ளும்போது காஃபின் உங்கள் உடலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் உறிஞ்சுதலைக் குறைக்கிறது. குறிப்பாக கால்சியம் மற்றும் இரும்பு.
* காஃபின் கொழுப்பை எரிக்க உதவுகிறது, ஆனால் இது வளர்சிதை மாற்றத்தையும் குறைக்கிறது.
*அதிகளவு காஃபின் உங்களை இரவில் விழித்திருக்க வைக்கும்.
எப்போது, எவ்வளவு உட்கொள்ள வேண்டும்?
*உணவுக்கு முன், குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது இடைவெளி இருக்கவும்.
*ஒரு நாளைக்கு இரண்டு கோப்பைகளுக்கு மேல் உட்கொள்ள வேண்டாம்.
* நாளின் இரண்டாவது பாதியில் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
* நீங்கள் ஏதேனும் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், தவிர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“