Advertisment

நீங்கள் ஏன் மல்பெரி சாப்பிட வேண்டும்.. ஊட்டச்சத்து நிபுணர் பகிரும் 3 காரணங்கள் இதோ!

மல்பெரி மிகவும் ஆரோக்கியமானது மற்றும் விலைமதிப்பற்றது என்று ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் இன்ஸ்டாகிராமில் கூறினார்.

author-image
WebDesk
Apr 13, 2022 11:20 IST
New Update
Mulberry

Nutrition expert shares health benefits of mulberry

கோடை மாதங்களில், போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் மூலமும்’ உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் கடுமையான வெப்பம் நீரிழப்பு மற்றும் அதிகப்படியான வியர்வை போன்ற பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

Advertisment

அத்தகைய சுவையான மற்றும் பொதுவாகக் காணப்படும் கோடைப் பழங்களில் ஒன்று மல்பெரி. இந்த பழம் "உலகின் எல்லா இடங்களிலும் ஏராளமாக கிடைக்கிறது. இருப்பினும், இதன் பல நன்மைகள் பற்றி மக்கள் அதிகம் அறியவில்லை. மல்பெரி மிகவும் ஆரோக்கியமானது மற்றும் விலைமதிப்பற்றது என்று ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் இன்ஸ்டாகிராமில் கூறினார்.

திவேகர் பகிர்ந்துள்ளபடி, மல்பெரியின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இங்கே!

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இன்றைய காலக்கட்டத்தில், நாம் அதிக நேரத்தை திரைக்கு முன்னால் செலவிடுகிறோம். இதனால் கண் சோர்வு மற்றும் வறட்சி ஏற்படும். மல்பெரியில் "கரோட்டின் மற்றும் ஜீயாக்சாண்டின் " உள்ளது, இது கண் ஆரோக்கியத்திற்கு நல்லது.  நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க நீங்கள் எடுக்கக்கூடிய சிறந்த வைட்டமின் ஷாட் இதுவாகும்.

செரிமான பிரச்சனைகளை போக்குகிறது

பலர் தொடர்ந்து வயிறு வீக்கத்துடன் போராடுகிறார்கள். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், மல்பெரியை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது, இதில் பல அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

இதற்கு முன், ஆயுர்வேத நிபுணர் டிக்சா பவ்சராவும் மல்பெரி பழத்தின் பல நன்மைகளைப் பகிர்ந்துள்ளார்.

வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், மல்பெரி வைட்டமின் கே, சி மற்றும் பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும். "செரிமானத்திற்கு உதவுதல், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல், அதிக கொழுப்பைக் குணப்படுத்துதல் மற்றும் ஈறு நோய்களைத் தடுக்கின்றன.

அவை முடி மற்றும் தோல் தொடர்பான பல நன்மைகளையும் வழங்குகின்றன. "முடி உதிர்தல், முகப்பரு மற்றும் தழும்புகளைக் குறைக்கவும், வயதாவதைத் தாமதப்படுத்தவும், வறண்ட மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கும் மல்பெரி உதவுகிறது" என்று மருத்துவர் பாவ்சர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment