/indian-express-tamil/media/media_files/2025/03/15/67ol8guFunnrIERjfjgB.jpg)
கிலோ ரூ.10-க்கு மலிவு விலையில் கிடைக்கும் தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு. தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. இரும்புச் சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்கிறார் மருத்துவர் நிஷா.
தக்காளியில் அதிகளவு கேரோடினாய்டு, ஆன்டி ஆக்சிடெண்ட் இருப்பதால், சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளியினால் ஏற்படும் தாக்குதல்களிலிருந்தும் சருமத்தை காக்கும், வயதாவதையும் தாமதப்படுத்துகிறது. தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்கிறார் மருத்துவர் நிஷா.
தக்காளியின் ஜூஸ் முகத்தில் தடவினால், முகப்பரு உள்ளிட்ட பிரச்னைகளைக் கட்டுப்படுத்த முடியும். தக்காளி பழத்தில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை நமது எலும்பை உறுதியாகவும் திடமாகவும் மாற்றும் என்கிறார் மருத்துவர் நிஷா.
கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை தக்காளியில் போதுமான அளவு உள்ளது. ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் (Prostate) புற்றுநோய் ஆகியவை வராமல் காப்பதாகவும் கூறுகிறார் மருத்துவர் நிஷா.
மேலும், பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. சாதரணமாக சருமத்தின் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கம், அதோடு மிகவும் வெயிலில் அலைவதால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளையும் தக்காளி தீர்க்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.