பண்டிகை மற்றும் விழா காலத்தில் பொரித்த உணவுகள் மற்றும் இனிப்புகளிடம் விலகி இருப்பது முற்றிலும் சாத்தியமற்றது. ஆனால், இதுபோன்ற இன்பங்கள் அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது போன்றவை, மலச்சிக்கல் உட்பட பல்வேறு செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஆனால் கவலைப்பட வேண்டாம், உங்கள் கொண்டாட்டங்களை மிகவும் வேடிக்கையாக மாற்றும் சில நிபுணத்துவ பரிந்துரைகளுடன் நாங்கள் இருக்கிறோம்!
ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் (Rujuta Diwekar) கூறியபடி, விழா அல்லது பண்டிகை காலங்களில் உங்கள் செரிமான உறுப்புகளை சீராக்க, குறிப்பாக மூன்று உணவுகள் பயனுள்ளதாக இருக்கும்.
மேத்தி லட்டு
வெந்தயம், வெல்லம், நெய் மற்றும் சுக்கு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த லட்டுகள், வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கும். குடலுக்குரிய ஈரமான திசுக்களை ஊக்குவிக்கிறது. வயிற்றின் மோசமான செயல்பாட்டின் காரணமாக மென்மையாக இல்லாத உங்கள் கூந்தலை பொலிவுடன் வைத்திருக்கும்.
நீங்கள் வழக்கமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை தவறவிட்டிருந்தால், காலை உணவாகவோ அல்லது மாலை (4-6 மணி) நேர உணவாகவோ அவற்றை சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்த உதவுகிறது," என்று அவர் கூறினார்.
ஒரு கிளாஸ் மோர்!
மதிய உணவுக்குப் பிறகு, பெருங்காயம் மற்றும் கருப்பு உப்பு சேர்த்த மோர் பருகவும். மோர், புரோபயாடிக்குகள் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றின் நல்ல ஆதாரமாக இருந்தாலும், பெருங்காயம் மற்றும் கருப்பு உப்பு கலந்திருப்பதால் இது வீக்கம், வாயு ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது மற்றும் குடல் எரிச்சலைத் தடுக்கிறது.
ச்யவன்பிரஷ் (Chyawanprash)
தூங்கும் போது ஒரு டீஸ்பூன் ச்யவன்பிரஷ் (ஆயுர்வேத ஹெல்த் சப்ளிமெண்ட்) சாப்பிடுவது, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கும். இது ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் திடமான ஆதாரம். இது சருமம் மிருதுவாகவும் மென்மையாகவும் இருப்பதை உறுதி செய்யும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இதை பண்டிகை, விழா காலங்கள் மட்டுமில்லை. தினசரி சாப்பிடலாம். இதனால் உங்கள் செரிமான உறுப்புகள் ஆரோக்கியம் பெற்று, சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil