Advertisment

டயட் இல்லாமல் எளிதாக உடல் எடையை குறைக்க இந்த மூன்று வழிகளை பின்பற்றுங்கள்!

Nutritionist suggests smart ways lose weight without crash dieting Tamil News வியத்தகு முறையில் எதையும் செய்யாமல், நீங்கள் விரும்பிய எடையைப் பெறுவதற்கான மூன்று ஸ்மார்ட் வழிகளைப் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nutritionist suggests smart ways lose weight without crash dieting Tamil News

Nutritionist suggests smart ways lose weight without crash dieting Tamil News

Nutritionist suggests smart ways lose weight without crash dieting Tamil News : உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், புதிய டயட் மற்றும் உணவுகளை முயற்சி செய்வது மற்றும் சில கூடுதல் எடையைக் குறைப்பது தொடர்ச்சியான போராட்டம் என்பதை அறிவார்கள். உடல் எடையைக் குறைப்பது ஒரு போராட்டமாக இருக்கக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடல் எடையைக் குறைக்கும் செயல்பாட்டில், ஒருவர் தங்கள் ஆரோக்கியத்தில் சமரசம் செய்யக்கூடாது.

Advertisment

உங்கள் உணவை மாற்றும்போதும், எப்போதாவது ஏமாற்று உணவுகள் மூலம் அதிக சுத்தமான உணவுப் பழக்கங்களை அறிமுகப்படுத்தும்போதும் உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஊட்டச்சத்து நிபுணரான அஸ்ரா கான் சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வியத்தகு முறையில் எதையும் செய்யாமல், நீங்கள் விரும்பிய எடையைப் பெறுவதற்கான மூன்று ஸ்மார்ட் வழிகளைப் பகிர்ந்து கொண்டார்.

நாம் சாப்பிடுவதில் சமரசம் செய்யாமல் ஒருவர் தங்கள் உணவில் 'கலோரி பற்றாக்குறையை' புத்திசாலித்தனமாக உருவாக்க முடியும் என்று கான் கூறினார்.

உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் உடல் எடையைக் குறைக்க சில வழிகள் இங்கே:

  1. எடை பயிற்சி

இந்த செயல்முறை உங்கள் தசையை அதிகரிப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர் அறிவுறுத்தினார்.

  1. இன்டெர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்

உடற்தகுதி மற்றும் ஆரோக்கிய உணர்வுள்ளவர்களிடையே காணப்படும் ஓர் வெற்றி, இன்டெர்மிட்டன்ட் ஃபாஸ்டிங். இதில், ஆரோக்கியமான உணவை சாப்பிட்ட பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உண்ணாமல் இருக்கவேண்டும். உணவை ஜீரணிக்க, அதிகப்படியான உடல் கொழுப்பை எரிக்கவும், நச்சு நீக்கவும் உடலுக்கு நேரம் கொடுப்பதே இதன் அடிப்படைக் கொள்கை.

  1. ஒரு கிலோ உடல் எடையில் 1 கிராம் புரதம்

உங்கள் உணவில் அதிக புரோட்டீன்களை சேர்த்து சாப்பிடுங்கள் என்று நிபுணர் அறிவுறுத்துகிறார். எனவே நீங்கள் நீண்ட நேரம் பசியில்லாமல் முழுமையுடனும் திருப்தியுடனும் இருக்க முடியும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Diets
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment