new york dosa man : நியூயார்க்கின் சந்து மூலைக்கு சென்று தோசை மேன் கடை எங்கே? என்று கேட்டால் போதும் மொத்த நியூயார்க் வாசிகளும் திருக்குமாரின் தோசையை பற்றி பேசத் தொடங்கிவிடுவார்கள். என்னது ஒரு தோசை மாஸ்டரை பற்றி மொத்த நியூயார்க்கும் சொல்லுமா? என்று ஆச்சரியப்படாதீர்கள். அந்த அளவுக்கு அவர்களை தனது சுவையால் கைவண்ணத்தால் கட்டிப்போட்டு வைத்துள்ளார் இலங்கை தமிழர் திருக்குமார்.
இவரை பற்றி கூகுளில் தேடினால் கூட உங்களுக்கு மொத்த தகவலும் தெரிந்து விடும். பஞ்சம்பிழைக்க போனவர் இன்று நியூயார்க் வாசிகளுக்கு வாய்க்கு ருசியான உணவை அளித்துக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவில் தமிழர்கள் பலரும், சாப்ட்வேர் இன்ஜினியர், டாக்டர், சிவில் இன்ஜினியர், ஏரோநாட்டிகல் இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பு படிப்புகளை படித்துவிட்டு கைநிறைய சம்பளத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.ஆனால் இவர்களுக்கு மத்தியில் தெருவில் மிகச் சிறிய தோசையை கடையை வைத்து அதிகளவில் லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார் தோசை மேன் திருக்குமார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/07/sachin-26.jpg)
தோசை மேன் :
நியூயார்க் என்றவுடன் பலருக்கும் நினைவில் வருவது இரட்டைக் கோபுரங்கள் தான். இதற்கு அருகில் உள்ள பென் ரயில்வே ஸ்டேஷன் அருகே கிறிஸ்டோபர் தெருவில் தான் நமது தோசை மேன் கடை உள்ளது. கடை பெயர் என்ன தெரியுமா? new york dosa.
மும்பைக்கு அடுத்தப்படியாக எப்போதுமே பரபரப்பாக காணப்படும் நகரங்களில் நியூயார்க்கும் ஒன்று. நியூயார் நகரவாசிகள் எப்போதுமே அவசர அவசரமாக தங்களது பணிகளை தொடர்ந்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த பிஸியிலும் அவர்கள் திருக்குமார் கடையில் தோசை சாப்பிட 1 மணி நேரம் ஆனாலும் தயங்காமல் வரிசையில் நின்றுக் கொண்டிருப்பது தான் ஆச்சரியமான ஒன்று.
என்ன ஸ்பெஷல்?
இவரின் கடையில் கிடைக்காத தோசையே இல்லை.கீரை தோசை தொடங்கி மசாலா, பாண்டிச்சேரி தோசை என மொத்த 40க்கும் மேற்பட்ட தோசை வகைகளை ருசிப்பார்க்க வைக்கிறார். பல்வேறு தோசைக்கு தேவையான எல்லா பொருள்களையும், சட்னி, சாம்பார், இட்லி பொடி என அனைத்தையும் வீட்டில் இவரே தயாரித்து எடுத்துவருவதால் சுவையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. இதனால்தான் இவரது தயாரிப்புகள் மிகவும் ருசியாக உள்ளன.
இவருக்கு பாராட்டுகள் குவியாத நாடுகளே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு கலிபோர்னியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் ரசிகர்கள் உண்டு.அமெரிக்காவுக்கு பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் விஜயம் செய்வதால் இவரது கடை குறித்த விவரங்கள் 42 புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.
கிளைகள் உண்டு:
சொன்ன நம்ப மாட்டீங்க திருக்குமார் சீனா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் லண்டன் ஆகிய இடங்களிலும் நியூயார்க் தோசை கடை கிளைகளை திறந்துள்ளார். திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 12 மணி வரை பிற்பகல் 3 மணி வரை இவரது கடை திறந்திருக்கும்.
உலகின் பல நாட்டு மக்களும் வசிக்கும் நியூயார்க்கில் அமெரிக்கன், மெக்ஸிகன், ஐரோப்பியன், ஆப்கன் ஸ்ட்ரீட் ஃபுட்களுக்கு மத்தியில் நம் ஊர் தோசையையும் போட்டிபோடவைத்துள்ளார் தோசை மேன் திருக்குமார். அதுமட்டுமில்லை இவரின் தோசை விலை 7 டாலர்கள் அமெரிக்காவில் பர்கர் விலை இதைவிட அதிகம். சொல்லப்போனால் திருக்குமாரின் கடைக்கு அதிகளவில் வெள்ளையர்களே வருவார்களாம். திருக்குமார் நியூயார்க்கில் தோசை கடை தொடங்கி 18ஆண்டுகள் வெற்றிக்கரமாக கடந்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/07/DSC02610-26-1024x682.jpg)
கடல் கடந்து சென்றாலும் கண்ணியமாகப் பிழைத்திடுவான் கௌரவமாக வாழ்ந்திடுவான் தமிழன் என்பதை பறைசாற்றி இருக்கிறார் திருக்குமார்.