Oats Recipes, Oats Adai Making Tamil Video:பருப்பு அடை அனைவருக்கும் பிடிப்பதில்லை. சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. தவிர, அதிலிருந்து வித்தியாசமான சுவையுள்ள ஒரு அடையை விரும்புகிறவர்களின் தேர்வு ஓட்ஸ் அடை! சுலபமாக ஜீரணமாகும் ஒரு உணவுப் பொருள் ஓட்ஸ் என்பதால் இதை அனைத்து தரப்பினரும், எந்த வேளையிலும் சாப்பிடலாம்.
Advertisment
ஓட்ஸ் அடை அல்லது ஓட்ஸ் மசாலா அடையை அனைவருக்கும் பிடிக்கும் விதமாக டேஸ்டாக செய்வது எப்படி? என இங்கு பார்க்கலாம்.
Oats Adai Making Tamil Video: ஓட்ஸ் அடை
Advertisment
Advertisements
ஓட்ஸ் அடை செய்யத் தேவையான பொருட்கள்: ஓட்ஸ் - 1 கப், வெள்ளரிக்காய் - சிறு துண்டு, குடை மிளகாய் - 2, பச்சை மிளகாய் - 1, கொத்தமல்லி - சிறிதளவு, மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்.
ஓட்ஸை 15 நிமிடங்கள் நீரில் ஊற வைக்க வேண்டும். அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு அரைத்த விழுதை சேர்க்க வேண்டும். பிறகு குடை மிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிப்போடுங்கள். மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
பின்னர் அடை போல் தட்டி எடுத்து தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுங்கள். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும். மிக சிம்பிளான செய்முறையில் ஓட்ஸ் மசாலா அடை அனைத்து தரப்பினரும் விரும்புகிற உணவாக இருக்கும். உடல் எடை குறைப்புக்கும் இதை முக்கிய உணவாக பரிந்துரைக்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"