ஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்!

Obesity remedies: குளிர்பானங்கள் (carbonated drinks), பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை (refined foods) தவிர்க்க வேண்டும்.

By: July 8, 2020, 8:43:07 AM

Obesity Remedies News In Tamil: அதிக அளவு நொறுக்கு தின்பண்டங்களை உண்பது, எந்தவித உடல் செயல்பாடும் இல்லாமல் இருப்பது, நீண்ட மற்றும் ஒழுங்கற்ற வேலை நேரத்தோடு ஒழுங்கற்ற தூக்க முறைகள் ஆகியவற்றால் ஊரடங்கு காலத்தில் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது என லக்னோவில் உள்ள Regency Superspeciality மருத்துவமனை, குடல்நோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரதீப் ஜோஷி தெரிவிக்கிறார்.

கவலையளிக்க கூடிய இந்த போக்கு குறித்து உலகம் முழுவதும் உள்ள குடல் நோய் நிபுணர்கள் விவாதிக்கின்றனர். கரோனா வைரஸுக்கு மட்டும் ஒருவர் அச்சமடைந்தால் போதாது, ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள முடக்கத்தால் நமது டயட் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நமது உடல் பருமன் அபாயமும் அதிகரித்து வருகிறது.

நிலா போல் முகம் ஜொலிக்க பால், ரொட்டி போதுமே…

ஊரடங்கு காரணமாக உடல் பருமன் பிரச்சனை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. உடல் பருமனோடு நேரடியாக தொடர்புடைய நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் ஆகியவற்றின் ஆபத்து கோவிட்-19 காரணமான இறப்பு விகிதத்தை அதிகரிக்கும். கோவிட்-19 உயிரிழப்பிற்கு உடல் பருமனை ஒரு முக்கியமான ஆபத்து காரணியாக மேற்கத்திய நாடுகளில் நடைபெற்ற பல ஆய்வுகள் ஏற்கனவே நிரூபித்துள்ளன. உடல் பருமனை சரியான நேரத்தில் அடையாளம் கண்டுகொள்வதும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலமும் உடல் செயல்பாடை அதிகரிப்பதன் மூலமும் அதை தடுப்பது அவசியம், என மருத்துவர் ஜோஷி அலோசனை கூறுகிறார்.

ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Obesity reducing, Obesity home made remedies, abdominal Obesity, thoppai remedies, தொப்பை குறைய வழி, உடல் பருமன் குறைய Obesity remedies- தொப்பை குறைய வழி

* நன்கு சீரான உணவை உட்கொள்ளுங்கள்: ஆரோக்கியமான உணவு நாட்பட்ட நோய்கள் மற்றும் தொற்று நோய்களின் அபாயத்தை கட்டுப்படுத்துகிறது. முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பயிறு வகைகள் மற்றும் கொட்டை வகைகளை நிறைய உட்கொள்ள வேண்டும். எண்ணெயில் வறுத்த பொரித்த உணவு, நொறுக்கு தீனிகள், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் (carbonated drinks), பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை (refined foods) தவிர்க்க வேண்டும். Antioxidants அதிகமாக உள்ள உணவுகளை ஊக்குவிக்கலாம். மேலும் தினசரி தேவையான அளவு புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

* தேவையான அளவு நீர் பருகுங்கள்: தினசரி குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக அளவு நீர் மோர், இளநீர், பழச்சாறு ஆகியவற்றையும் அருந்தலாம். மது குடிப்பதையும் புகை பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக தேனீர் மற்றும் காபி குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

கறந்த பாலை அப்படியே குடிப்பது நல்லதா? ஷாக் ஆய்வு

* சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்: வீட்டின் உள்ளேயே அதிக நேரம் செலவிடுவதால் வீட்டின் உள்ளே இருந்து செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளை தினசரி அரை மணி நேரம் செய்யலாம். யோகா மற்றும் தியானம் ஆகியவற்றையும் செய்யலாம். தினசரி வீட்டு வேலைகளையும் நீங்களே செய்யலாம்.

ஆராக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் ஊரடங்கு காலத்தில் உடல் பருமன் ஆவதை தடுக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:How to reduce obesity risk during the lockdown how to reduce weight

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X