உடல் எடையால் அவதிப்படுகிறீர்களா? : உங்களுக்காகத்தான் இந்த செய்தி…

எளிய உணவு பழக்கவழக்கங்களின் மூலம் மிக எளிதாக உடல் எடையை நாம் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

By: June 12, 2019, 2:52:19 PM

உடல் பருமன் ஏதோ நமக்கு மட்டுமே பிரச்னையாக உள்ளது என்று நினைத்துவிட வேண்டாம். இது சர்வதேச அளவில் பெரும்பிரச்னையாக மாறியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில், உடற்பருமன் பிரச்னை பூதாகரமாகவே உள்ளது. உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று அதன்மூலம் நடக்கும் வர்த்தகமே, ஆண்டு ஒன்றுக்கு பல்லாயிரம் கோடிகளை தாண்டும்….

எளிய உணவு பழக்கவழக்கங்களின் மூலம் மிக எளிதாக உடல் எடையை நாம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அந்தவகையிலான சில எளிய பழக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும்.
உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம்.

1) உடற்பயிற்சியின் மூலம் எடைகுறைப்பு

எடையைத் தூக்கி செய்யப்படும் பயிற்சிகள் தளர்வடைந்த தசைகளை இறுக்கமடைய செய்யும் திறன் கொண்டவை. நல்ல அழகான கட்டுக்கோப்பான உடலழகை பெறுவதற்கும், வயதாவதால் உண்டாகும் தசை இழப்பு பிரச்சனைகளுக்கும் எடை தூக்கும் பயிற்சியே சிறந்தது.
‘‘நம் உடலின் ஒவ்வொரு பகுதி தசைக்கும், அதன் எடையை விடவும் அதிக எடை கொண்ட உபகரணங்களின் மூலம் எடை தூக்கும் பயிற்சிகள் செய்வதால் தசைகள் நன்கு வலுப்படும். இந்த எடை தூக்கும் பயிற்சிகள் பெண்களுக்கு அதிகப்படியான நன்மையை கொடுப்பவை. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு வளர்சிதை மாற்ற விகிதம் குறைவு என்பதால், வளர்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும், எலும்பின் அடர்த்தியை மேம்படுத்தவும் இத்தகைய பயிற்சிகள் உதவுகின்றன.

2) பழங்கள் மற்றும் காய்கறிகளின் மூலம் தீர்வு

ஒரு வாரத்திற்கு, பழங்கள் மற்றும் காய்கறிகள் தவிர வேறு எந்த உணவையும் சாப்பிட வேண்டாம். இந்த எளிய முறையை நீங்கள் பின்பற்றினால், உங்கள் வீட்டிலேயே நீங்கள் எடையை குறைக்கலாம். இந்த 7 நாட்களுக்கு கேரட், ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, பைன் ஆப்பிள் மற்றும் வெள்ளரிக்காய் சாப்பிட முயற்சி செய்யவும்
ஆனால் இந்த 7 நாட்களில் எந்த கனமான வேலைகளையும் செய்யாதீர்கள். உணவுத் திட்டத்தில் திடீரென மாற்றம் ஏற்படுவதால், உங்கள் உடல் ஆற்றல் பன்மடங்கு குறையும் மற்றும் சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு வாய்ப்புகள் இருக்கும். எனவே முதலில் 1 அல்லது 2 நாட்களுக்கு அதை செய்ய முயற்சிக்கவும் படிப்படியாக 7 நாள் அதிகரிக்கவும்.

3) உடல் எடையைக்குறைக்க வேண்டும் என்றால் தண்ணீர் குடிப்பதும் முக்கியம்

சாப்பிடும் முன் நீர் குடிக்க வேண்டும், பகல் மற்றும் இரவு நேரங்களிலும் நீரை பருக வேண்டும். உணவருந்தாமல் கூட மாதக்கணக்கில் உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால், நீர் அருந்தாமல் உங்களால் இரண்டு நாட்களை கூட தாண்ட முடியாது. உடலில் நீர்வறட்சி அதிகரிக்க, அதிகரிக்க, உடல் உறுப்புகளின் செயலாற்றல் குறைய ஆரம்பிக்கும். எனவே நீர் குடிப்பது முக்கியம்.
பரவலாக ஒரு நாளுக்கு மூன்று லிட்டர் அளவு நீர் அனைவரும் அருந்த வேண்டும் என கூறப்படுகிறது. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தான் நீரை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், அளவுக்கு மீறி நீர் பருகுவதால் உடல்நல சீர்கேடுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

4) பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. நீண்டகாலமாக பதப்படுத்தி வைத்திருக்கும் உணவுகள் உடை எடையை அதிகரிக்கும்.

5) பசலைக்கீரை அதிமருந்து

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் அடிக்கடி தங்களது உணவில் பசலைக்கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதில் ஏராளமான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கீரையை உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடலின் வலிமையும் மேம்படும். அதற்கு இந்த கீரையை பச்சையாக சாலட்டுகளில் சேர்த்தோ அல்லது சூப்புகளாக தயாரித்தோ உட்கொள்ளலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Obesity people body weight reduce

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X