ஒடிசாவில், ஜூன் நடுப்பகுதியில், ஒரு வித்தியாசமான பண்டிகை கொண்டாடப்படுகிறது. . 'மிதுன சங்கராந்தி' என்றும் அழைக்கப்படும் 'ராஜா பர்பா' பண்டிகை , ஒரு தனித்துவமான கதையை கொண்டிருக்கிறது - குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்றாக வைத்திருக்கும் பெண்களை கொண்டாடுவதையும் மற்றும் பூமியை தாயை போற்றுவதும் ஆகும்.
3 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, இது சமூக மாற்றத்தை நோக்கிய ஒரு மென்மையான தூண்டுதலாகும். பெண்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், அவர்களின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதன் மூலமும், திருவிழா பாரம்பரிய பாலின விதிமுறைகளை மாற்றுகிறது.
இது இயற்கை மற்றும் நிலையான நடைமுறைகளுக்கு மதிப்பளிக்கும் செய்தியை குறிக்கிறது, ஆரோக்கியமான வாழ்வு மற்றும் அதிகாரம் பெற்ற பெண்கள் ஒரு செழிப்பான சமூகத்தின் அடிப்படை கற்கள் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
பண்டிகையின் முதல் நாள் "பஹிலி ராஜா"வின் போது வீடுகள் பெண்களால் தோரணங்களால் அலங்கரிக்கப்படும். பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படும். சுவையான வாசனை சமையலறைகளில் இருந்து வீசுகிறது. சிரிப்பு மட்டுமல்லாமல் வழக்கமான வேலைகளின் ஆரவாரத்தை மாற்றுகிறது, ஏனெனில் பெண்கள் தாங்களே ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள்.
ஆங்கிலத்தில் படிக்க: This Indian festival celebrates womanhood; know more about it
ஆனால் ராஜா பர்பா என்பது self-care மட்டுமல்ல. இரண்டாவது நாள், "ராஜ சங்கராந்தி", பருவமழையின் வருகையைக் குறிக்கிறது, இது பூமி தாய்க்கு மரியாதை செலுத்தும் நேரம்.
விவசாயிகள் வளமான விளைச்சலுக்கு உறுதியளிக்கும் உயிர் கொடுக்கும் மழைக்கு நன்றி செலுத்துவர். இயற்கைக்கு நன்றி செலுத்துவர்.
பண்டிகையின் 3-வது நாள் தான் ஷோ டாப்பர். டோலி கேலா," இது "ஸ்விங் பிளே" ஊஞ்சல் விளையாட்டாகும். பெண்கள் அழகான ஆடைகள் அணிந்து வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் பறக்கிறார்கள்.
ஒருவருக்கொருவர் குங்குமத்தை பூசி விளையாடி மகிழ்கிறார்கள். நாட்டுப்புறப் பாடல்களின் மகிழ்ச்சியான மெல்லிசையுடன் இது நடக்கிறது. . திருவிழா என்பது வண்ணங்களின் காட்சி மட்டுமல்ல; இது சகோதரத்துவத்தின் கொண்டாட்டம், பெண்களின் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மைக்கு ஒரு சான்றாகிறது.
பெண்கள் முக்கிய இடத்தைப் பிடித்தாலும், ராஜா பர்பா அனைவருக்குமான கொண்டாட்டம் ஆகும் . ஆண்கள் பண்டிகைகளில் கலந்துகொண்டு, சமத்துவத்தின் பிணைப்பை வலுப்படுத்தி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைகின்றன, சமூகத்தின் முக்கியத்துவத்தையும் ஒருவருக்கு ஒருவர் மீதான அன்பை, மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“