எண்ணெய் இல்லாத சமையலை நினைத்துப் பார்க்க முடியுமா? சாம்பார் முதல் மொறுமொறு சிக்கன் பொரியல் வரை சைவ, அசைவ சமையல் எதுவாக இருந்தாலும் எண்ணெய் அதன் சுவையை மேலும் கூட்டுகிறது.
அதனாலேயே நம்மில் பெரும்பாலான வீடுகளில் பல லிட்டர் எண்ணெய் கேன்களை மொத்தமாக வாங்கி வைக்கிறோம். எனவே சிறிதளவு எண்ணெயை வெளியிடும் ஸ்ப்ரே பாட்டில்களுக்கு மாறுவது கேம்சேஞ்சராக இருக்கலாம்.
ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சௌமிதா பிஸ்வா (chief clinical nutritionist at Aster RV Hospital, to understand the health benefits of this innovation) இந்த கண்டுபிடிப்பின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி பேசினார்.
ஆயில் ஸ்ப்ரே, எண்ணெய் பயன்பாட்டை கணிசமாகக் குறைக்கின்றன. மக்கள் தாங்கள் பயன்படுத்தும் எண்ணெய்யை அளவில்லாமல் ஊற்றுவதற்குப் பதிலாக அளவிட முடியும், இது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆயில் ஸ்ப்ரே கேன்கள் மலிவானவை, மேலும் ஏரோசல் நாஸல், துல்லியமாகவும் கட்டுப்பாட்டுடனும் எண்ணெயை பயன்படுத்த உதவுகிறது என்று பிஸ்வாஸ் கூறினார்.
எண்ணெயுடன் தொடர்புடைய ஏதேனும் ஆரோக்கிய நன்மைகள் உள்ளதா?
பல்வேறு சமையல் எண்ணெய்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, டி மற்றும் பீட்டா கரோட்டின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சமையலில் ஒரே ஒரு வகையைச் சார்ந்து இருக்காமல், பல்வேறு எண்ணெய்களை பயன்படுத்துவது எப்போதும் விரும்பப்படுகிறது.
ஒமேகா-3 நிறைந்த ஃபிஷ் ஆயில் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த ஆலிவ் எண்ணெய்யில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
தேங்காய் எண்ணெயில் மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள் (MCT) உள்ளது, மேலும் தாவர எண்ணெய் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, என்று பிஸ்வா குறிப்பிட்டார்.
டீப் ஃபிரையிங் உணவு அதிக எண்ணெயை உறிஞ்சிவிடும். அதற்கு பதிலாக, குறைந்த அளவு எண்ணெயுடன் வதக்க முயற்சிக்கவும், அங்கு ஆயில் ஸ்ப்ரேக்கள் பயனுள்ளதாக இருக்கும். மேலும், வறுக்கப்படும் போது அதிக வெப்பம் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை ஊக்குவிக்கிறது.
அனைத்து எண்ணெய்களும் அதிக சமையல் வெப்பநிலையில் பயன்படுத்த பாதுகாப்பானவை என்றாலும், அவை குறைந்த அளவிலேயே உட்கொள்ளப்பட வேண்டும்.
1 கிராம் எண்ணெய் 9 கிலோகலோரிகளை வழங்குகிறது, மேலும் அதிகப்படியான நுகர்வு உடல் பருமன், இதய பிரச்சினைகள் மற்றும் பிற நோய்கள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று பிஸ்வாஸ் எச்சரித்தார்.
Read in English: Oil bottles vs sprays: Which is the healthier alternative for your kitchen cabinet?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“