முகத்தில் எண்ணெய் வழிகிறதா – ஆரஞ்சு பழம் இருக்க பயமேன்…

Oily skin remedies : ஆரஞ்சு பழம் சருமத்துக்கு நல்ல பலன்களை அளிக்கக்கூடியது. ஆரஞ்சு சாற்றை தடவினால், அதில் இருக்கும் மூலப்பொருட்கள் சருமத்தின் ஆழம் வரை சென்று எண்ணெயை கட்டுப்படுத்தும்.

By: October 10, 2019, 2:41:53 PM

கோடை காலத்தில் ஒருவருக்கு ஆயிலி ஸ்கின் பிரச்னை வருமானால் அதற்கான பராமரிப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும். மேலும் கோடை வெயிலால் சருமம் வறண்டும் போகலாம், அல்லது தொடர்ந்து வெயில்படுவதால் சருமம் எண்ணெய் வடிந்து காணப்படும். இதனால் ஸ்கின் பாதிக்கப்படும். இந்நிலையில், இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட நம் வீட்டில் உள்ள பொருட்களே போதும். அதில் ஒன்றுதான் சிட்ரஸ் அமிலம் நிறைந்த ஆரஞ்சு பழம்.

ஆரஞ்சு பழம் சருமத்துக்கு நல்ல பலன்களை அளிக்கக்கூடியது. ஆரஞ்சு சாற்றை தடவினால், அதில் இருக்கும் மூலப்பொருட்கள் சருமத்தின் ஆழம் வரை சென்று எண்ணெயை கட்டுப்படுத்தும். சருமத்தைப்பாதுகாக்கும் ஆரஞ்சை 3 விதமாக பயன்படுத்தலாம்.

ஆரஞ்சு மற்றும் கடலை மாவு பேக்

தேவையானவை:

கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
பல்பி ஆரஞ்சு ஜூஸ் – 3 டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 2 டேபிள் ஸ்பூன் (தேவைக்கேற்ப)
செய்முறை:ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு ஜூசுடன் கடலை மாவைப் போட்டு நன்றாக கலக்கி, தேவைப்பட்டால் ரோஸ் வாட்டரையும் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் முகம் ஃப்ரெஷ்ஷாகவும், வாசனையாகவும் இருக்கும். பின் கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் காய வைத்து குளிர்ந்த நீரில் கழுவலாம் அல்லது காட்டன் பஞ்சில் துடைத்து எடுக்கலாம். இதை வாரத்துக்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு மற்றும் வேம்பு ஃபேஸ் பேக்

தேவையானவை:

வேப்பிலை – அரைத்தது, 3 டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சு பல்ப் – 3 டேபிள் ஸ்பூன்
பால் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரைத்த வேப்பிலையையும் பாலையும் சேர்த்து கலந்து, பின் இந்தக் கலவையில் ஆரஞ்சு பல்ப்பை சேர்க்கவும். பேஸ்ட் பதத்துக்கு வந்தவுடன், முகத்திலிருந்து கழுத்து வரை அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர, ஆயில் ஸ்கின் மறைந்து போகும்.

ஆரஞ்சு மற்றும் ஓட்மீல் ஃபேஸ் பேக்

தேவையானவை:

ஓட்மீல் – 1 டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை: ஓட்மீல் – 1 டேபிள் ஸ்பூன், ஆரஞ்சு ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன் இந்த இரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் பேஸ்ட் பதத்துக்குக் கலக்க வேண்டும். பேஸ்ட் இப்பொழுது ஸ்கரப்பர் போன்று இருக்கும். முகத்தைச் சுற்றி அப்ளை செய்து 10-12 கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Oily face problem orange gives solution

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X