/indian-express-tamil/media/media_files/2025/05/23/MbezLXRhzuVgcX0fZ039.jpg)
Okra for hair growth
வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்திருப்பீர்கள். ஆனால், அதையும் தாண்டி வெண்டைக்காயில் ஒரு சூப்பர் டிப்ஸ் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் முடி உதிர்வதைத் தடுக்கவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் மாற்றவும் வெண்டைக்காயைப் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 6-7
சின்ன வெங்காயம் - 3-4
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு
கருஞ்சீரகம் - அரை ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்பு
தயாரிக்கும் முறை:
ஆறு அல்லது ஏழு வெண்டைக்காயை எடுத்து இரண்டாகவோ மூன்றாகவோ நசுக்கிக் கொள்ளவும்.
இதனுடன் மூன்று அல்லது நான்கு சின்ன வெங்காயம் மற்றும் ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகளைச் சேர்த்து நன்றாகத் தட்டிக் கொள்ளவும்.
நசுக்கிய வெண்டைக்காய் கலவை மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி, ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், அதில் அரை ஸ்பூன் கருஞ்சீரகத்தைச் சேர்த்துக் கொள்ளவும்.
மீண்டும் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்துவிடவும்.
இந்தத் தண்ணீரைக் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்தத் தண்ணீர் தொட்டால் நல்ல வளவளப்புடன் இருக்கும்.
பயன்படுத்தும் முறை:
இந்த வடிகட்டிய தண்ணீரை உங்கள் தலைக்கு அப்ளை செய்யவும். முடி உதிர்வு, அடர்த்தி குறைவு, அல்லது ஃப்ரெஸ்ஸியான முடி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை உடனே முயற்சிக்கலாம்.
வடிகட்டிய வெண்டைக்காய் தண்ணீருடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயையும் கலந்து கொள்ளவும்.
இதனுடன் நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்பூவையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
எப்போது ஹேர் வாஷ் செய்கிறீர்களோ, அப்போது இந்த ஷாம்பு கலவையைப் பயன்படுத்தி தலையை அலசவும்.
இந்த முறையைப் பயன்படுத்தும் போது, முடி உதிர்வு உடனடியாகக் கட்டுப்படும். உங்கள் முடி பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் மாறும். இந்தக் கலவையை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.
இந்தக் குறிப்பு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.