Advertisment

நேர்மையால் பல இதயங்களை வென்ற ஓலா ஆட்டோ டிரைவர்

ஹீரோஸ் ஆஃப் ஓலா' திட்டத்தின் கீழ், சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழும் ஓலா ஆட்டோ டிரைவர்களை  (கூட்டாளர்களை ) அடையாளம் கண்டு கவுரப்படுத்தப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நேர்மையால் பல இதயங்களை வென்ற ஓலா ஆட்டோ டிரைவர்

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து வலை நிறுவனங்களில் ஒன்றான ஓலா, 'ஹீரோஸ் ஆஃப் ஓலா' திட்டத்தின் கீழ், தங்களது வழக்கமான கடமைகளைத் தாண்டி வாடிக்கையாளர் சேவையின் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் முன்மாதிரியாக விளங்கும்  ஓலா ஆட்டோ டிரைவர்களை  (கூட்டாளர்களை ) அடையாளம் கண்டு கவுரப்படுத்துகிறது.

Advertisment

தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?

 

இந்த பொங்கல் திருநாளில், மனதை கரைய வைக்கும் ஒரு நிகழ்வு இதோ உங்களுக்காக : 

‘ஹீரோஸ் ஆஃப் ஓலா’வில் ஒருவரான கே. கோபு, சாலையில் 2.4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைக் கண்டறிந்தார்.   ஒரு பொருள் அதன் உரிமையாளரிடம் சென்று சேர வேண்டும் என்று உறுதி பூண்ட  கோபு , உடனடியாக, போலீசாரிடம் அனைத்து நகைகளையும்  ஒப்பைடைத்தார்.

விவரம்:  

கோயம்புத்தூரில் உள்ள லட்சுமி மில்ஸை நோக்கிச் சென்று கொண்டிருந்த கோபு, ​​செஞ்சிலுவைச் அமைப்பு கட்டிட வளையம்  அருகே தங்க நகைகள்  இருக்கும் பையை கண்டார்.  ரசீதில் அச்சிடப்பட்ட விவரங்களின் அடிப்படையில் உரிமையாளருக்கு உடனடியாக தகவலை அறிவித்தார் .பையை போலீசாரிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்,

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் கோயம்புத்தூர் - திருச்சி சாலையில் வசிப்பவர் கே.கயாத்ரி இந்த நகையின் உரிமையாளர்.

இது குறித்து அவர் கூறுகையில்  “இந்த நகைகளை வாங்குவதற்காக நான் மிகவும் கடினமாக உழைத்தேன், அதனால் இழப்பை என்னால்உணர கூட முடியவில்லை. அந்த நகைகளை கோபு போலீசாரிடம் ஒப்பைடைத்துவிட்டார் என்று செய்தி என்னால மறக்கவே முடியாது. அவரது நேர்மையை நான் பாராட்டுகிறேன்! இந்த சமூதாயத்திற்கு அவர் முன்மாதிரி" என்று தெரிவித்தார்.

காவல்துறை ஆணையாளர் சுமித் ஷரன் கே.கோபுவின் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை சனிக்கிழமை பாராட்டினார்.

ஓலா ஆட்டோ டிரைவர் , கே.கோபு இது குறித்து கூறுகையில் , “நான் தங்கத்தைக் கண்டுபிடித்தபோது ஒரு வித ஆர்வம் என்னுள் இருந்தது, பை அதன் உரிமையாளரை அடைந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்துவது எனது தார்மீக பொறுப்பு என்பதையும் அந்த கணத்தில் உணர்ந்தேன். அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு, ‘ஓலாவின் ஹீரோ’ என்று அழைக்கப்படுவதில் நான் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்தார்.

Ola Cabs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment