காய்ந்துபோன பூக்களை வைத்து வீட்டிலேயே வாசமான சாம்பிராணி தயார் செய்யலாம். இதற்கு வெளியிலிருந்து காய்ந்த பூக்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை வீட்டில் பூஜை அறைகளில் பயன்படுத்தும் பூக்கள் வைத்தே சாம்பிராணி தயார் செய்யலாம்.
முதலில் வீட்டில் பயன்படுத்தப்படும் பூக்களை சேகரித்து வைக்கவும். நன்கு காய்ந்த பூக்களுடன் வெட்டிவேர் மற்றும் காய்ந்த வெற்றிலையையும் சேர்த்து சாம்பிராணி செய்யலாம். இவை அனைத்தும் நன்றாக காய்ந்து இருக்க வேண்டும். ஈரப்பதம் சிறிது கூட இருக்கக் கூடாது.
இவை அனைத்தையும் மிக்ஸியில் நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றவும். மீண்டும் மிக்ஸியில் வாசனை தரக்கூடிய பொருட்களான சம்பங்கி, 10 ஏலக்காய், 10 கிராம், கொஞ்சம் பச்சை கற்பூரம், மஞ்சள் தூள் ஆகியவை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
சந்தன பொடி இருந்தாலும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். பின்னர் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு நெய் சேர்க்கவும். தண்ணீர், பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் போன்றவற்றையும் சேர்த்து புட்டு மாவு பதத்தில் பிசைந்து எடுக்க வேண்டும்.
பின்னர் இதனை நமக்கு ஏற்ற வடிவிற்கு பிடித்து கொள்ளவும். இதனை ஒரு மூன்று நாட்களுக்கு வெயிலில் காய வைக்க வேண்டும். குறிப்பாக இதில் ஈரப்பதம் இருக்க கூடாது. அப்படி ஈரப்பதம் இருந்தால் சாம்பிராணி புகையாது.
எனவே ஈரப்பதம் இல்லாமல் சாம்பிராணி காயவைத்து எடுத்துக் கொள்ளவும், இதனை சாமி கும்பிடும்போது பயன்படுத்தி வரலாம். நல்ல மனமுடன் கடையில் வாங்கும் சாம்பிராணி போலவே இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“