பழைய சாதம் வைத்து ரொம்ப சுவையான ஆப்பம் செய்ய முடியும். இதன் ரெசிபியை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 3 கப்
உளுந்தம் பருப்பு – முக்கால் கப்
ஒரு முழு தேங்காய் துருவியது
பழைய சாதம் – 1 கப்
செய்முறை : பச்சரியை, உளுந்தையும் நன்றாக கழுவ வேண்டும். தொடர்ந்து அதில் தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு முழு தேங்காயை துருவிக்கொள்ள வேண்டும். பச்சரி, உளுந்து ஊறிய பிறகு, அதை கிரைண்டரில் சேர்க்கவும், அதில் துருவிய தேங்காய், பழைய சாதம் சேர்த்து சிறிய அளவு தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். அதிக மையாக அரைக்க வேண்டாம். அதற்கு முன்பாக இருக்கும் பதத்தில் அரைத்துக்கொள்ளுங்கள். தற்போது கிரைண்டரில் இருந்து மாவை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு. அடுத்த நாள் காலை வரை புளிக்க வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் மாவு பொங்கி இருக்கும். அதில் ஆப்பத்திற்கு தேவையான அளவு மாவை எடுத்து வைத்து, அதில் உப்பு சேர்த்து வழக்கம்போல் ஆப்பம் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“