/indian-express-tamil/media/media_files/2025/06/24/easily-clean-doorknobs-2025-06-24-15-31-57.jpg)
பழைய சாக்ஸ் போதும்… இப்படி செய்தால் கதவு இடுக்குகளை ஈசியா கிளீன் பண்ணலாம்!
வீட்டில் மூலை முடுக்குகளில் படிந்திருக்கும் தூசியை சுத்தம் செய்வது பலருக்கு சவாலான காரியம். குறிப்பாக, சுவர்களின் அடிப்பகுதியிலுள்ள டைல்ஸ்கள், கதவு இடுக்குகளில் சேரும் தூசுகளை அகற்றுவது கடினம். ஆனால், இதற்கென ஒரு எளிய, பயனுள்ள வீட்டுக்குறிப்பு பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
கதவு இடுக்குகள், ஜன்னல்களின் ஓரம் மற்றும் சுவர்களின் அடிப்பகுதியில் உள்ள டைல்ஸ் போன்ற இடங்களில் சேரும் தூசியை அகற்றுவது சற்று சிரமமானது. இந்த இடங்களைச் சுத்தம் செய்ய, நாம் அடிக்கடி ஒரு துணியைப் பயன்படுத்த முயற்சிப்போம். ஆனால் கையை நுழைத்து சுத்தம் செய்வது சிரமமாகவும், சில சமயங்களில் கைகளுக்கு வலியையும் ஏற்படுத்தும். இந்த சிக்கல்களுக்கு எளிமையான மற்றும் பயனுள்ள தீர்வு பழைய சாக்ஸைப் பயன்படுத்துவதுதான்.
எப்படி செய்வது?
முதலில் பழைய, பயன்படுத்தாத சாக்ஸை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நீண்ட குச்சி (உதாரணமாக, சிலந்தி வலை கூட்டும் குச்சி) அல்லது உங்கள் கை எட்டாத இடங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு துடைப்பத்தின் பின்புறத்தைப் பயன்படுத்துங்கள். சாக்ஸை அந்தக் குச்சியின் முனையில் மாட்டி, அது கழன்று வராதபடி ரப்பர் பேண்டுகளால் இறுக்கமாகக் கட்டிக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் தயார் செய்த இந்தக் கருவியைக் கொண்டு கதவு இடுக்குகள், ஜன்னல் ஓரங்கள், மற்றும் சுவர்களின் அடிப்பகுதியிலுள்ள டைல்ஸ்கள் போன்ற இடங்களை எளிதாகத் துடைக்கலாம்.
நீண்ட குச்சியுடன் இணைக்கப்பட்ட சாக்ஸ், கை எட்டாத மூலை முடுக்குகளையும், குறுகிய இடுக்குகளையும் எளிதாகச் சென்றடைய உதவுகிறது. சாக்ஸின் மென்மையான அமைப்பு, தூசியை நன்கு உறிஞ்சி ஒட்டிக்கொள்ளும். இதனால், ஒரே தடவையில் அதிக தூசியை அகற்ற முடியும். கஷ்டப்பட்டு குனிந்து அல்லது நாற்காலி போட்டு ஏறி சுத்தம் செய்யும் தேவை இருக்காது. ஒரே இடத்தில் நின்று கொண்டே தூசியைத் துடைக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.