/indian-express-tamil/media/media_files/2025/09/02/whatsapp-image-202-2025-09-02-14-15-32.jpeg)
Coimbatore
மலையாள மக்களின் இதயம் கவரும் திருவிழாவான ஓணம், வருகிற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் அதற்கு முன்பாகவே கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவையிலும் ஓணம் பண்டிகை உற்சாகமாகத் தொடங்கியது.
கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா தனியார் கல்லூரியில் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கேரளாவின் பாரம்பரிய கசவு உடை அணிந்து, கல்லூரி வளாகத்தை மலர்களால் அலங்கரித்து, கண்கவர் பூக்கோலம் இட்டனர். அந்த இடம் முழுவதுமே பூக்களின் வண்ணத்தில் ஜொலித்தது.
பூக்கோலத்தை சுற்றி மாணவிகள் திருவாதிரை களி நடனம் ஆடி, ஓணத்தின் புராண நாயகனான மகாபலி மன்னனை வரவேற்றனர். மேலும், கேரளாவின் அடையாளமான செண்டை மேளத்தின் தாளத்திற்கேற்ப மாணவ, மாணவிகள் உற்சாக நடனமாடினர். கல்லூரியின் இந்த ஓணம் கொண்டாட்டம், கேரளாவின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.
கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கேரள பாரம்பரிய உடைகளை அணிந்த மாணவ, மாணவிகள் பூக்கோலம் இட்டும், திருவாதிரை களி நடனமாடியும், செண்டை மேளம் முழங்க உற்சாக நடனமாடியும் ஓணம் பண்டிகையைக் கொண்டாடினர்... pic.twitter.com/HiDx4H1gdA
— Indian Express Tamil (@IeTamil) September 2, 2025
பாரம்பரிய நடனங்களைத் தொடர்ந்து, டி.ஜே. இசைக்கு ஏற்ப மாணவ மாணவிகள் துள்ளிக்குதித்து நடனமாடினர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த விழா, ஓணத்தின் மகிழ்ச்சியையும், கலாச்சார ஒற்றுமையையும் பறைசாற்றுவதாக அமைந்தது.
பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.