ஒரு கொய்யாபழம் போதும்… இப்படி செய்தால் பல்லி, கரப்பான் பூச்சி வீட்டை விட்டு ஓடிடும்!
ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தாமல், வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே தொல்லை தரும் எலி, பல்லி, கரப்பான் பூச்சிகளை விரட்ட சில அற்புதமான இயற்கை வழிகளை நாலினி மணிக் குக்கிங் (Nalini Manick Cooking) தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

Advertisment
டிப்ஸ்:1
இந்த முறை எலிகள், பல்லிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளுக்கு மிகவும் பயனுள்ளது. ஒரு பழுத்த கொய்யா பழம் (பச்சை கொய்யா அல்ல) 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர், கருப்பு மிளகுத் தூள், அரை ஸ்பூன் நாப்தலீன் பவுடர் (நாப்தலீன் உருண்டைகளை பொடித்துப் பயன்படுத்தவும்)
செய்முறை: கொய்யா பழத்தின் நடுப்பகுதியை எடுத்து நன்றாக மசிக்கவும். மசித்த கொய்யாவுடன் பேக்கிங் பவுடர், கருப்பு மிளகுத் தூள் மற்றும் நாப்தலீன் பவுடரைச் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாகக் கலந்து சிறிய உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும். பூச்சிகள் அதிகம் வரும் இடங்களான சமையலறை, அடுப்பின் கீழ், மூலைகள் போன்ற இடங்களில் இந்த உருண்டைகளை வைக்கலாம். இரவில் வைப்பது சிறந்தது. 2 நாட்களுக்கு ஒருமுறை என, 2 அல்லது 3 முறை தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். கொய்யாவின் வாசனை பூச்சிகளை ஈர்க்கும், ஆனால் பேக்கிங் பவுடர் அவற்றின் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும். மிளகுத் தூள் எரிச்சலைத் தர, நாப்தலீன் அவற்றிற்கு தீங்கு விளைவிக்கும்.
Advertisment
Advertisements
டிப்ஸ்:2
இந்த திரவ ஸ்பிரே எலிகள், பல்லிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்ட உதவும். பொடித்த நாப்தலீன் உருண்டைகள், ஒரு கிளாஸ் சுடுநீர், டெட்டால்
செய்முறை: நாப்தலீன் உருண்டைகளை நன்றாகப் பொடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுடுநீருடன் நாப்தலீன் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும். (சுடுநீர் நாப்தலீனை எளிதில் கரைத்து வாசனையை அதிகரிக்கும்). நீர் ஆறிய பிறகு, டெட்டாலை சேர்த்து மீண்டும் கலக்கவும். இந்த கலவையை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ளவும். இரவில் வீட்டின் நுழைவாயில், குளியலறை மூலைகள், சமையலறை ஓரங்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் நுழையும் இடங்களில் தெளிக்கலாம். இது பூச்சிகள் வீட்டிற்குள் வருவதைத் தடுக்கும். நாப்தலீன் மற்றும் டெட்டாலின் கடுமையான மணம் பூச்சிகளை விரட்டி, அவை வீட்டிற்குள் நுழையாதபடி தடுக்கும்.
டிப்ஸ்:3
இது குறிப்பாக எலிகளை விரட்ட உதவும் ஒரு எளிமையான வழி. ஸ்டீல் ஸ்க்ரப்பர் (பாத்திரம் கழுவப் பயன்படுத்தப்படுவது), முன் தயாரித்த கொய்யாப் பழ உருண்டைகளில் மீதமுள்ள கொய்யாப் பழத்தின் ஓடு.
செய்முறை: ஸ்டீல் ஸ்க்ரப்பரை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கொய்யாப் பழத்தின் ஓட்டின் உள்ளே இந்த ஸ்டீல் ஸ்க்ரப்பர் துண்டுகளை செருகவும். எலிகள் நடமாடும் பகுதிகளில் இந்த கொய்யாப் பழத் துண்டுகளை வைக்கலாம். எலிகள் கொய்யாவை உண்ண முயலும்போது, உள்ளே இருக்கும் ஸ்டீல் ஸ்க்ரப்பர் அவற்றை கடித்து மெல்லுவதில் சிரமத்தை ஏற்படுத்தும், இதனால் அவை அங்கிருந்து விலகிச் செல்லும்.