ரொம்ப ஈசியா செய்ய முடிந்த ரசம் சாதத்தை நீங்களும் வீட்டில் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் அரிசி
துவரம் பருப்பு ½ கப்
பாசி பருப்பு – ¼ கப்
400 எம்.எல் தண்ணிர்
தக்காளி 1 நறுக்கியது
மஞ்சள் பொடி – ¼ டேபிள் ஸ்பூன்
உப்பு
அரை கப் புளி தண்ணீர்
ரசப் பொடி – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கருவேப்பிலை 1 கொத்து
கடுகு, சீரகம்
3 வத்தல்
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை : ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி சேர்க்கவும். அதில் துவரம் பருப்பு, பாசி பருப்பு, மஞ்சள் பொடி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். தொடர்ந்து வேக வைத்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதில் புளி கரைத்ததை சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் சூடான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து அதில் எண்ணெய், கடுகு, சீரகம், வத்தல், கருவேப்பிலை தாளித்து கொட்டவும். தொடர்ந்து அதில் ரசப் பொடி சேர்த்து கிளரவும். மீணடும் சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி இலையை தூவ வேண்டும். சூடான ரசம் சாதம் ரெடி.