வெங்காயம், ஆமணக்கு எண்ணெய்.. இவை முடி வளர்ச்சிக்கு உண்மையில் உதவுகிறதா?

Onion Castor oil Grey hair Myths and facts of Hair care Tamil News நான்கு பிரபலமான முடி பராமரிப்பு ஆலோசனைகளில் உள்ள கட்டுக்கதைகள் என்னவென்று பார்க்கலாம்.

Onion Castor oil Grey hair Myths and facts of Hair care Tamil News
Onion Castor oil Grey hair Myths and facts of Hair care Tamil News

Onion Castor oil Grey hair Myths and facts of Hair care Tamil News : முடி உதிர்தல், பொடுகு மற்றும் முன்கூட்டியே முடி நரைப்பது ஆகியவை ஆண், பெண் என எல்லா வயதினரையும் கவலைக்குள்ள்ளாக்குகிறது. வானிலை, கடினமான நீர் அல்லது முறையான முடி பராமரிப்பு இல்லாதது போன்ற பல காரணிகளால், ஏராளமான மக்கள் இதுபோன்ற தலைமுடி பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற பிரச்சினைகளை நிர்வகிக்க நிறைய மக்கள் விலையுயர்ந்த தலைமுடி பராமரிப்பு பொருட்களை நாடும்போது, சிலர் மற்றவர்களின் ஆலோசனைகளையும் நம்பியுள்ளனர். ஆனால், அவை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

நாம் பொதுவாகக் கேட்கும் இதுபோன்ற நான்கு பிரபலமான முடி பராமரிப்பு ஆலோசனைகளில் உள்ள கட்டுக்கதைகள் என்னவென்று பார்க்கலாம்.

*முடி வளர்ச்சிக்கு ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் பயன்பாட்டினால் முடி நன்கு வளரும் என்பதற்கான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. ஆமணக்கு எண்ணெய்யால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் அது உங்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.

*முடி வளர்ச்சிக்கு வெங்காயச் சாறு

வெங்காயச் சாற்றில் சல்பர் உள்ளது. இது அலோபீசியா அரேட்டா எனும் ஒரு விதமான முடி உதிர்தல் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. ஆனால், இது மற்ற எல்லா வகையான முடி உதிர்தலுக்கும் சிகிச்சையளிக்க முடியாது.

*விரைவான வளர்ச்சிக்கு ஹேர்கட் செய்வது

முடி வளர்ச்சி உங்கள் உச்சந்தலையில் வேர்கள் இருந்து தொடங்குகிறதே தவிர முடி நுனிகளால் எந்தவித தாக்கமும் இல்லை. அதனால், முடி வெட்டுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

*நரை முடியை இழுப்பது அவற்றை அதிகரிக்கும்

மயிர்க்கால்களில் உள்ள நிறமி செல்கள், மெலனின் உற்பத்தியை நிறுத்தும்போது முடி நரை அல்லது வெள்ளையாக மாறும். எனவே, நரை முடியை இழுப்பது அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்காது. அவை இயற்கையாக அதிகரிக்கிறதே தவிர, ஒற்றை நரை முடியை இழுப்பதனால் அல்ல.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Onion castor oil grey hair myths and facts of hair care tamil news

Next Story
சுகர் பிரச்னை தீர்வு, இதய பராமரிப்பு… முந்திரியில் இவ்ளோ நன்மை இருக்கு!Tamil Health tips: Nutrition, health benefits, and diet of Cashews
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com