onion chutney recipe , onion chutney recipe in tamil : காலையில் இட்லி அல்லது தோசைக்கு மிகவும் சிம்பிளாக ஒரு சட்னி செய்ய நினைத்தால், வெங்காய சட்னியை செய்து சாப்பிடுங்கள். இது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய அட்டகாசமான சட்னி. மேலும் இது கெட்டுப் போகவும் செய்யாது. காலையில் செய்தால், இரவு வரை வைத்து சாப்பிடலாம். பேச்சுலர்களுக்கு ஏற்ற சட்னியும் கூட.
Advertisment
தினமும் டிபனுக்கு என்ன சட்னி செய்வது என்று புலம்பும் தாய்மார்களுக்கு, மிக எளிதாகவும், சுவையாகவும் சமைத்திடலாம்.
onion chutney recipe onion chutney recipe in tamil : தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 4 பெரியது
Advertisment
Advertisements
தக்காளி - 2 பெரியது
வற்றல் மிளகாய் - 5
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு சிறிது சிவந்ததும் அதில் வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு வற்றல் மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும். இதில் தக்காளி சேர்த்து வதக்கி ஆற வைக்க வேண்டும்.
ஆற வைத்த அனைத்து பொருட்களையும் அரைத்து எடுக்கவும். எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து கொட்டவும்.
சுவை மிகுந்த வெக்காய சட்னி ரெடி. இவற்றை இட்லி, தோசை, சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil