Advertisment

மொறு மொறு கறிவேப்பிலை... இதைச் சேர்த்து வெங்காய சட்னி செய்து பாருங்கள்

Onion Chutney recipe சின்ன வெங்காயம் வைத்து இந்த ஸ்டைலில் சட்னி செய்து பாருங்கள், நிச்சயம் மறுமுறை செய்வீர்கள்.

author-image
WebDesk
New Update
Onion Chutney recipe small onions chutney breakfast recipes

Small onions chutney breakfast recipes

Chinna Vengayam Chutney Tamil : பொதுவாகவே சின்ன வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவை சாம்பாருக்கு மட்டுமல்ல சட்னிக்கு எக்ஸ்டரா சுவை கொடுக்கக்கூடியது. சின்ன வெங்காயம் வைத்து இந்த ஸ்டைலில் சட்னி செய்து பாருங்கள், நிச்சயம் மறுமுறை செய்வீர்கள்.

Advertisment

தேவையான பொருள்கள்

நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

கடுகு – 2 டீஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

சிவப்பு மிளகாய் – 5

சின்ன வெங்காயம் – 20

தக்காளி – 1 பெரியது பழுத்தது

உப்பு -  தேவையான அளவு

தேங்காய் - 4 பல் (புளிப்புச் சுவை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளலாம்)

செய்முறை

சூடான வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கடலை பருப்பு, சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும்.

பருப்பு பொன்னிறமானதும் கறிவேப்பிலை சேர்த்து அவை மொறுமொறுவென ஆகும் வரை வறுக்கவும். மொறுமொறுவென இருக்கும் கருவேப்பிலையைச் சட்னியோடு சேர்த்து அரைக்கும்போது அதன் சுவை அதிகரிக்கும்.

பிறகு, இரண்டாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பாதியளவு வதங்கியபின், தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். புளிப்புச் சுவை அதிகம் வேண்டும் என்பவர்கள் சிறிதளவு புளியையும் இப்போது சேர்த்துக்கொள்ளலாம்.

வெங்காயம் பொன்னிறமாகவும் தக்காளி குழைந்தும் இருக்கும் பதம் வந்தபின் உப்பு மற்றும் சிறிதளவு தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கவும்.

இந்தக் கலவையை நன்றாக ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுங்கள். இதில் சேர்க்கப்பட்டிருக்கும் கடுகும், கறிவேப்பிலையும் வெங்காய சட்னியின் சுவையை அதிகரிக்கும்.

அடுத்ததாகத் தாளிப்பதற்கு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், உளுத்தம்பருப்பு, கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து, அரைத்து வைத்த சட்னியில் சேர்த்தால் சுவையான வித்தியாசமான வெங்காய சட்னி ரெடி!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment