சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், கிளிசரினை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும் என ஒரு தகவல் பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை? நிபுணர்களின் கருத்து என்ன?
நாம் வெங்காயம் அல்லது பூண்டு சாப்பிட்ட பிறகு வாய் துர்நாற்றம் ஏற்படுவது சகஜம். ஆனால் இதை விரைவாக சரிசெய்ய நிரூபிக்கப்பட்ட தீர்வு உள்ளதா? இந்த தேடலில், சமூக வலைத்தளங்களில் ஒரு தீர்வு கிடைத்தது. சமையலறை மற்றும் வீட்டு வழிகாட்டி மஞ்சு மிட்டல் கூற்றுப்படி, கிளிசரினை வெதுவெதுப்பான நீரில் கலந்து வாயில் போட்டு கொப்பளித்து துப்பினால், வாய் துர்நாற்றம் நீங்கும்.
இது வேலை செய்யுமா?
வெங்காயம் மற்றும் பூண்டில் சல்ஃபர் கொண்ட சேர்மங்கள் இருப்பதால் அவை ஒரு கடுமையான வாசனையை உருவாக்குகின்றன. சமைப்பதற்காக இந்த பொருட்களை நறுக்கும் போது அல்லது உரிக்கும் போது, 'ஆலியம்' என்ற என்சைம் வெளியிடப்படுகிறது. இது அமினோ அமில சல்ஃபாக்ஸைடு போன்ற சேர்மங்களை சல்ஃபெனிக் அமிலமாக மாற்றுகிறது. "இந்த அமிலங்கள் தான் ஒரு கடுமையான, கசப்பான வாசனையை உருவாக்குவதற்கு முக்கிய காரணம்" என்று வொக்கார்ட் மருத்துவமனையின் (மீரா ரோடு) மூத்த உணவியல் நிபுணர் ரியா தேசாய் கூறுகிறார்.
கிளிசரின், கிளிசரால் என்ற சேர்மத்தைக் கொண்டுள்ளது, இது ஒரு நிறமற்ற மற்றும் மணமற்ற திரவம் ஆகும், இது ஒரு இனிப்பு சுவை கொண்டது.
"கிளிசரின் ஒரு ஈரப்பதமூட்டி என்பதால் வாயை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது, மேலும் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கவும், ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. கிளிசரின் அடிப்படையிலான மவுத்வாஷ்கள் அல்லது பற்பசைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று தேசாய் கூறினார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/20/sPc9RGHlwlz7KYD1Y8w7.jpg)
ஆனால் கிளிசரின் பயன்படுத்த வேண்டுமா?
ஆனால், ஆர்டெமிஸ் மருத்துவமனை (குருகிராம்) கிளினிக்கல் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஷபானா பர்வீன், கிளிசரினை தண்ணீரில் கலந்து ஒரு தீர்வாகப் பயன்படுத்துவது, வழக்கத்தில் இல்லாத ஒன்று. சர்க்கரை இல்லாத சூயிங்கம் மெல்லுவது உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டும், இது உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது.
கவனிக்க வேண்டியவை:
கிளிசரின் தண்ணீரில் வாயை கொப்பளிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் தவறுதலாக கிளிசரினை உள்ளிழுத்தால் வயிற்றுப்போக்கு, வீக்கம், வாயு மற்றும் வயிற்று வலி போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். "கிளிசரின் நன்மை பயக்கும், ஆனால் அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது" என்று தேசாய் கூறினார்.
இதற்கு பதிலாக, இரண்டு நிமிடங்களுக்கு குறைந்தது பற்களை துலக்குவது, சரியாக ஃப்ளூஸ் செய்வது அல்லது மவுத்வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது போன்றவற்றை செய்யலாம்.
டாக்டர் பர்வீன், நிறைய தண்ணீர் குடிப்பது வாயை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் உணவுத் துகள்களை வெளியேற்றுகிறது, இதனால் துர்நாற்றத்தை நீக்குகிறது என்று கூறினார்.
"வெங்காயம் அல்லது பூண்டு காரணமாக அமிலத்தன்மை அல்லது துர்நாற்றத்தால் நீங்கள் சிரமப்பட்டால், அவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். கடுமையான வாசனை கொண்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு துர்நாற்றம் வருவது இயல்பானது மற்றும் அதை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது" என்று தேசாய் கூறினார்.
Read in English: Can glycerine help you get rid of bad breath?