/tamil-ie/media/media_files/uploads/2020/09/5-23.jpg)
onion pakoda recipe onion pakoda recipe in tamil
Onion pakoda recipe, Onion pakoda recipe in tamil : விருந்தினர்களின் வருகையின்போதும், குழந்தைகளின் சிணுங்கலின்போதும் இல்லத்தரசிகளின் மெனுவில் இடம்பெறுவதும் பக்கோடாதான்.
ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும். உடலுக்குச் சத்தும் மனத்துக்கு உற்சாகமும் அளிக்கும் வெங்காய பக்கோடா தான் இன்றைய ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்.
onion pakoda recipe வெங்காய பக்கோடா செய்முறை!
பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
அரிசி மாவு - 50 கிராம்
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கொத்து
கடலை மாவு - 100 கிராம்
எண்ணெய் - 1/4 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
முதலில் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவேண்டும் .
நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு அனைத்தும் சேர்க்கவேண்டும் பிறகு ஒரு மேஜைக் கரண்டி எண்ணெயை சுடவைத்து அதனுடன் சேர்க்கவேண்டும் .
தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் கலந்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள கலவையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பரவலாக உதிர்க்கவும்
மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுத்து, எண்ணெயை வடியவிட்டு பின் பரிமாறவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.