/tamil-ie/media/media_files/uploads/2020/09/soup-recipe-tamil.jpg)
Onion Recipe in tamil, Onion Soup Video: ஆனியன் தோசை, ஆனியன் பக்கோடாவுக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனியன் சூப் எத்தனை பேருக்கு தெரியும்? ஆனியன் சூப் சுவையானது மட்டுமல்ல; நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதும் ஆகும்.
ஆனியன் சூப்-ல் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதே அதற்கு காரணம். தவிர, இதில் உள்ள குரோமியம் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இப்படி இம்யூனிட்டிக்கும், நீரிழிவு பிரச்னையை தீர்க்கவும் உதவும் வெங்காய சூப் எப்படி செய்வது என பார்க்கலாம்!
Onion For Immunity, Onion Soup Video: ஆனியன் சூப்
ஆனியன் சூப் செய்யத் தேவையான பொருட்கள் : பெரிய வெங்காயம் - 4, பூண்டுப் பற்கள் - 4, பச்சை மிளகாய் - 2, கெட்டியான தேங்காய்ப்பால் - அரை கப், வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், மிளகுத் தூள் - ஒரு டீ ஸ்பூன், நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது - ஒரு டீ ஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் வெண்ணெயை விட்டு உருகியதும் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதில் மூன்று கப் நீர் விட்டு மசாலா, உப்பு சேர்த்து வேகவிட வேண்டும்.
நன்றாக வெந்ததும் சிறிது ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, மிளகுத்தூள், கரைத்த சோள மாவு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு கொதி வர ஆரம்பிக்கும்போது, தேங்காய்ப்பாலை ஊற்றி, கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்க வேண்டும். இப்போது சுவையான சத்தான வெங்காய சூப் தயார். ட்ரை பண்ணிப் பாருங்கள்; நோய்களை விரட்டுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.