மொறு மொறு ஆனியன் ரிங்ஸ் இப்படி செய்யுங்க. மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
2 பெரிய வெங்காயம்
அரை கப் மைதா மாவு
2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
அரை டீஸ்பூன் சீரகத் தூள்
உப்பு
கால் டீஸ்பூன் மிளகு தூள்
தேவையான அளவு உப்பு
சிறிய அளவு தண்ணீர்
பிரட் கிரம்ஸ்
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: வெங்காயத்தை கழுவி, தோல் நீக்கி, வட்டமாக வெட்டி கொள்ளவும். ரிங் வடிவத்தில் தனியாக பிரித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு சேர்க்கவும். தொடர்ந்து அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். வெங்காயத்தை முதலில் இந்த மாவில் பிரட்டி எடுக்கவும். தொடர்ந்து இதில் தண்ணீர் சேர்த்து வெங்காயத்தை இதில் முக்கவும். தொடர்ந்து இதை பிரட் கிரம்ஸில் முக்கி எடுத்து, எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். சூப்பரான ஆனியன் ரிங்ஸ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“