onion samosa recipe onion samosa recipe in tamil : மாலை நேர ஸ்நாக்ஸ் வகைகளில் போண்டா, பஜ்ஜி, வடை என பல ரெசிப்பிகளைப் பார்த்திருக்கிறோம், அந்தவகையில் இப்போது வெங்காயs சமோசா
Advertisment
வெங்காய சமோசா மிகவும் ஈஸியான மற்றும் சுவையான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மைதா - 3 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
Advertisment
Advertisements
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
உள்ளே வைப்பதற்கு...
வெங்காயம் - அரை கிலோ
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 கப்
onion samosa recipe செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு மென்மையாக பிசைந்து, ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பாதியளவு வரை வதக்கி, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, இறக்க வேண்டும்.
* பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, பின் பூரி போன்று வட்டமாக தேய்த்து, இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் வதக்கி வைத்துள்ள கலவையை சிறிது வைத்து, சமோசா வடிவில் செய்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இப்போது சூப்பரான வெங்காய சமோசா ரெடி!!!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil