ஒரு முறை, இப்படி வெங்காயத் தொக்கு செய்து பாருங்க. அம்புட்டு ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
வெந்தயம் கால் ஸ்பூன்
அரை ஸ்பூன் சீரகம்
3 வெங்காயம் நறுக்கியது
பூண்டு 1 கை பிடி
1 கொத்து கருவெப்பிலை
எலுமிச்சை அளவு புளி
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
உப்பு
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
1 கைபிடி கொத்தமல்லி
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, அதில் சீரகம், வெந்தயம், சேர்த்து வதக்கவும். தொடர்ந்து வெங்காயம் நறுக்கியதை சேர்க்கவும். சேர்த்து கிளரவும். பூண்டு சேர்த்து கிளரவும். தொடர்ந்து பூண்டு சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து ஒரு கொத்து கருவேப்பிலை, புளி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளரவும். நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து இதை ஆற வைக்கவும். இதை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல், கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.