Onion Tomato Thokku recipe tomato Thokku ; தக்காளி தொக்கு உங்க ஃபேவரெட் டிஷ்ஷா..? அதை ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க..சுவையில் மெய் மறந்து போவீங்க.
Advertisment
தக்காளி – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 100 கிராம், எண்ணெய் – 50 கிராம், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், சோம்பு – சிறிதளவு, பட்டை, லவங்கம் – தலா ஒன்று, இஞ்சி – 2 துண்டு, பூண்டு – 5 பற்கள், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், புளிக்கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
தக்காளி, சின்ன வெங்காயம் இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு தாளிக்கவும். பின்பு இதனுடன் நறுக்கிவைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்க்கவும். அது சிறிதளவு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்க்கவும்.
Advertisment
Advertisements
இவை அனைத்தும் நன்றாகச் சுருண்டு வரும் வரை கிளறவும். அதன் பிறகு இதில் புளிக்கரைசல் சேர்க்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, உப்பு போட்டுக் கிளறவும். பின்னர் இக்கலவையைச் சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி கலவையை நன்கு கிளற வேண்டும். கலவை தொக்கு பதத்துக்கு வந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.