ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடக்கும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு பக்தர்கள் யாத்திரை செல்வார்கள். அப்படி செல்பவர்கள் இன்று முதல் இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்வதற்கு, சபரிமலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.sabarimalaonline.org என்ற முகவரியை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஆண்டு தோறும், கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் பய பக்தியோடு மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருப்பார்கள். பாதை யாத்திரையாக சபரிமலைக்கு சென்று தரிசனம் பெறுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பெருந்தொற்று பரவல் இருந்ததால், சபரிமலைக்கு பக்தர்களின் அளவு குறைவாகவே அனுமதிக்கப்பட்டது.
ஆனால், இந்தாண்டு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பக்தர்கள் வருகை தரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 27ம் தேதியோடு மண்டல பூஜை முடிந்து சபரிமலை நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகர விளக்கு பூஜைக்காக, டிசம்பர் 30ம் தேதி சபரிமலை நடை மீண்டும் திறக்கப்பட்டு, 2023ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை சாத்தப்படும். ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும்.
முன்பதிவு செய்வதற்கு, சபரிமலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sabarimalaonline.org என்ற முகவரியை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. முன்பதிவு செய்யப்படுவதினால் மண்டல பூஜை தரிசனத்திற்காக தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பூஜைகளுக்கு தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலைக்கு வருகைதருபவர்கள் தங்களது வாகனங்களை நிலக்கல் வரை கொண்டுவரலாம். அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் நடக்கும் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பூஜைக்காக, அக்டோபர் 17ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.