திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் வைகுண்ட துவார தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் டிசம்பர் 23 ஆம் தேதி காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட் டிசம்பர் 24 காலை 11 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது.
மேலும், சாதாரண பக்தர்கள் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்லாட்டட் சர்வ தர்ஷன் (SSD) டோக்கன்கள், திருமலையில் உள்ள கவுஸ்துபம் விருந்தினர் மாளிகையிலும், திருப்பதியில் உள்ள எட்டு நியமிக்கப்பட்ட கவுண்டர்களிலும் விநியோகிக்கப்பட உள்ளது.
திருப்பதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 10, 2025 அன்று கொண்டாடப்பட உள்ளது. மேலும் கருவறையைச் சுற்றியுள்ள உள் பாதையான வைகுண்ட துவாரம் ஜனவரி 10 முதல் ஜனவரி 19 வரை பக்தர்களுக்காக திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“