கோவை - ரெட் பீல்ட் இந்திய ராணுவ முகாம் அலுவலகம் அருகில் இந்திய ராணுவத்திற்கு பயன்படுத்தப்பட்ட "டி 55" ராணுவ டாங்கி"இன்று பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை ரெட் பீலடில் சாலையில் நடந்த இதன் திறப்பு விழாவில், இந்திய ராணுவ லெப்டினன் கர்னல் பிரார் திறந்து வைத்தார்.
பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள "டி ரக ராணுவ டாங்கி" 1955 ஆம் ஆண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது ஆகும். இது முதன் மதலாக 1971" ஆம் ஆண்டு பஞ்சாப் அருகில் நடந்த போரில் பயன்படுத்தப்பட்டது. இதன் முனையில் இருந்து முதல் கொண்டு 1971"ஆம் ஆண்டு பிப்ரவரி 3"ஆம் தேதி புறப்பட்டது. தொடர்ந்து இந்தியாவிற்காக பல போர்களில் இது பயன்படுத்தப்பட்டது.
தொடர்ந்து ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் பராக்கிராம் ஆகிய போர்களின்போது பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 38 வருடங்கள் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த டாங்கி கடைசியாக 2009"ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 24"ஆம் தேதி கடைசியாக போரில் குண்டுகளை அனுப்பியது. அதன் பிறகு இந்த டாங்கி பயன்பாடு இல்லாமல் இருந்தது. தற்போது கோவைக்கு கொண்டுவரப்பட்டு ரெட் பீல்டில் பொதுமக்கள் பார்வைக்கு இன்று முதல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மதுக்கரையில் உள்ள ராணுவ முகாமில் ஏற்கனவே ஒரு டாங்கி உள்ளது. இது கோவையில் உள்ள 2"வது டாங்கி ஆகும்.1679 பவுண்டு எடை உள்ள இந்த டாங்கி. முன்பு என்று ராணுவ அதிகாரிகள், கலெக்டர் மற்றும் வீரர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோவை கே.ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவச்சலம் மற்றும் ராணுவ அதிகாரிகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்