scorecardresearch

ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா, கொஞ்சம் எலுமிச்சை சாறு… பளிச்சிடும் வெள்ளை பற்களுக்கு வீட்டு வைத்தியம்

எலுமிச்சையில் இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்டுகள் உள்ளன, மேலும் எலுமிச்சை தோல் உண்மையில் உங்கள் பற்களை சுத்தம் செய்யும்.

lifestyle
Teeth whitening home remedies

முத்து போன்ற வெள்ளை பற்கள் அனைவரின் கனவு. ஆனால் ஒழுங்கற்ற பல் பராமரிப்பு மற்றும் சில கெட்ட பழக்கங்கள் உங்கள் பற்கள் அவற்றின் பிரகாசத்தை இழக்கச் செய்து, நாளடைவில் அவை மந்தமான மஞ்சள் நிறமாக மாறும். இந்த வைத்தியம் சில நாட்களில் பளபளப்பான வெள்ளை பற்களை உங்களுக்கு வழங்கும்.

உங்கள் பற்களை வெண்மையாக்க சில எளிய வைத்தியங்கள் இதோ!

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவின் சுத்திகரிப்பு பண்புகள் அனைவருக்கும் தெரியும், மேலும் இது உங்கள் பற்களுக்கு அதிசயங்களைச் செய்யும்.  நீங்கள் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 2 டீஸ்பூன் தண்ணீரில் கலந்து, பல் துலக்கலாம். வாரத்திற்கு 2-3 முறை செய்யலாம்.

மேலும் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவுடன், சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து மெல்லிய பேஸ்ட் செய்து. பேஸ்டை பற்கள் மீது தடவி 5-10 நிமிடங்கள் விடவும். அதன்பிறகு பல் துலக்கி தண்ணீரில் நன்கு கழுவவும்.

பழத் தோல்கள்

எலுமிச்சையில் இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்டுகள் உள்ளன, மேலும் எலுமிச்சை தோல் உண்மையில் உங்கள் பற்களை சுத்தம் செய்யும். எலுமிச்சை தோலை உங்கள் பற்களில் தேய்த்து, பிறகு வாயை கழுவவும்.

ஆரஞ்சு தோலிலும் கூட இதை செய்யலாம். ஆரஞ்சு தோலின் உட்புறத்தை உங்கள் பற்களின் மேல் 2 முதல் 3 நிமிடங்கள் தேய்க்கவும். நன்கு கழுவவும், பிறகு வழக்கமான பேஸ்ட் மூலம் பல் துலக்கவும்.

வாழைப்பழத் தோலில் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் இருப்பதால் பற்களை வெண்மையாக்க உதவுகிறது. ஒரு வாழைப்பழத் தோலை எடுத்து உங்கள் பற்கள் முழுவதும் ஓரிரு நிமிடங்களுக்கு மெதுவாக தேய்க்கவும். பிறகு வழக்கமான பேஸ்ட் உடன் பல் துலக்கி கழுவவும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் உண்மையில் உங்கள் பற்களை சுத்தம் செய்யும். ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை உங்கள் வாயில் எடுத்து ஐந்து நிமிடங்களுக்கு புல்லிங் செய்யுங்கள். மேலும் தினசரி, பேஸ்ட் உடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் கலந்து பல் துலக்கலாம். பயனுள்ள முடிவுகளைப் பெற, உங்கள் நாளைத் தொடங்கும் முன் தினமும் காலையில் ஒரு முறை இதைச் செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Oral hygiene teeth whitening home remedies baking soda lemon