முத்து போன்ற வெள்ளை பற்கள் அனைவரின் கனவு. ஆனால் ஒழுங்கற்ற பல் பராமரிப்பு மற்றும் சில கெட்ட பழக்கங்கள், உங்கள் பற்கள் அவற்றின் பிரகாசத்தை இழக்கச் செய்து நாளடைவில் அவை மந்தமான மஞ்சள் நிறமாக மாறும்.
பலர் தங்கள் பற்களை வெண்மையாக்க விலையுயர்ந்த சிகிச்சைகளை நாடுகிறார்கள்.
இங்கு சோஷியல் மீடியா பிரபலம் ஆர்மென் ஆடம்ஜான், உங்கள் வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அகற்றி, உங்கள் பற்களை வெண்மையாக்கும் ஒரு எளிய குறிப்பை பகிர்ந்துள்ளார்.
அதற்கு கிவி, வெள்ளரிக்காய் மற்றும் பேக்கிங் சோடா மட்டும் போதும்.
கிவி வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், இது வாயில் உள்ள பிளேக் மற்றும் கறைகளை அகற்ற உதவுகிறது, அதேசமயம் வெள்ளரி ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். பேக்கிங் சோடாவில் அதிக காரத்தன்மை உள்ளது, இது பற்களில் நுண்ணுயிர் எதிர்ப்பி பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் வாயின் pH ஐ பராமரிக்க உதவுகிறது. அதனால் இந்த ஹேக் பற்களை வெண்மையாக்கும்.
எப்படி செய்வது?
ஒரு பிளெண்டரில் சில கிவி துண்டுகள், கொஞ்சம் வெள்ளரி, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து ஒரு பேஸ்ட் போல நன்கு அரைக்கவும்.
இப்போது உங்களிடம் இருப்பது உங்கள் பற்களை வெண்மையாக்க இயற்கையான வழி.
கிவியில் கால்சியம் நிரம்பியுள்ளது, மேலும் வெள்ளரி உங்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அகற்ற உதவுகின்றன, இது உங்களுக்கு வெண்மையான பற்களை தருகிறது.
வாரத்திற்கு இரண்டு முறை இந்த பேஸ்ட்டைக் கொண்டு பல் துலக்குங்கள், பிறகு வித்தியாசத்தை பாருங்கள். இயற்கையான பொருட்கள் இருக்கும் போது, உங்களது பற்களை வெண்மையாக்கும் பொருட்களுக்கு ஏன் இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும்? வெள்ளரி மற்றும் கிவி பழங்கள் சுவையானது மட்டுமல்ல, உங்கள் வாயையும் பற்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் சக்தி கொண்டது என்று ஆடம்ஜான் அந்த வீடியோவில் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“