ஆரஞ்ச் பழத் தோலை பொடி செய்து… முகம் பொலிவாக மாற இப்படி யூஸ் பண்ணுங்க!
ஆரஞ்சு பழத்தோல் நம் சரும பராமரிப்பில் எவ்வாறு பயன்படுகிறது என்று இந்த செய்திக் குறிப்பில் காணலாம். குறிப்பாக, இதனை பயன்படுத்தும் போது நம் முகம் பொலிவாக மாறும்.
ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டதும் அதன் தோலை தூக்கிப் போட்டு விடுவோம். ஆனால், அவற்றை சேர்த்து வைத்து நம் சரும பராமரிப்பில் பயன்படுத்தலாம். இதனை எப்படி செய்ய வேண்டும் என இதில் பார்ப்போம்.
Advertisment
அதன்படி, ஆரஞ்சு பழத் தோலை மூன்று முதல் நான்கு நாட்களுக்கு வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்க வேண்டும். இவை காய்ந்ததும் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம். இதை அனைத்தையும் மிக்ஸியில் பொட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, இதை அரைக்கும் போது தண்ணீர் சேர்க்கக் கூடாது.
இந்தப் பொடியில் இருந்து தேவையான அளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு ஸ்பூன் பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். இவை பசை பதத்திற்கு வரும் வரை கலக்க வேண்டும். கூடுதலாக பால் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்தால் சூப்பரான ஃபேஸ் பேக் தயாராகி விடும். இதனை நம் முகத்தில் தடவி விட்டு, சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் கழுவி விடலாம். இப்படி செய்வதால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் முற்றிலும் நீங்கும். மேலும், முகப்பருக்களும் இந்த ஃபேஸ்பேக் மூலம் கட்டுப்படுத்தப்படும்.
Advertisment
Advertisements
இதனை சோப்புக்கு பதிலாகவும் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் வைட்டமின் சி நம் முகத்திற்கு இன்ஸ்டன்ட் பொலிவைக் கொடுக்கும்.
நன்றி - Mom's City Corner Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.