ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி அதிகம். ஆரஞ்சு பழத் தோல்கள் கூட வைட்டமின் சி-யின் வளமான மூலமாகும்.
ஆராய்ச்சியின் படி, ஆரஞ்சு பழத்தை விட அதன் தோலில் பாலிபினால் உள்ளடக்கம் அதிகம். ஆரஞ்சு தோல்களில் இருக்கும் அத்தியாவசிய எண்ணெய்கள் தோல் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் லிமோனைன் நிறைந்ததாக அறியப்படுகிறது.
ஆரஞ்சு தோல் பொடி எப்படி செய்வது?
ஆரஞ்சு பழத்தோல்களை நிழலில் காய வைக்கவும். அவை நன்றாக உலர்ந்ததும், தோல் நன்றாக பொடியாக மாறும் வரை மிக்சியில் அரைக்கவும். இந்த ஆரஞ்சு தோல் பொடியை தயிருடன் சேர்த்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம் அல்லது ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்.
/indian-express-tamil/media/media_files/vyNm0RmuLevlDqO27t7o.jpg)
ஆரஞ்சு தோல் பொடியை தயிருடன் சேர்த்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்
ஆரஞ்சு பழத்தோலில் உள்ள சிட்ரிக் அமிலத்தின் அதிக உள்ளடக்கம் சருமத்தை ஒளிரச் செய்கிறது.
நீங்களே சொந்தமாக வீட்டில் ஆரஞ்சு தோல் பொடி தயார் செய்யலாம். இது சருமத்தை இயற்கையாக பிரகாசமாக்கும். இது ஒரு சிறந்த பிளாக் ஹெட் ரிமூவராகவும் செயல்படுகிறது. இதனை தினமும் முகம் முழுவதும் ஸ்க்ரப் செய்வதன் மூலம், கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு தழும்புகளை நீக்கவும் உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“