/indian-express-tamil/media/media_files/B0LNhAyAUZ17g4wVR3GE.jpg)
Organic fertilizer Home gardening
உயிரினங்களுக்கு எப்படி உணவு முக்கியமோ, அதேபோல் தாவரங்களுக்கும் உரம் மிக முக்கியம். உரம் என்பது ஒரு தாவரத்தின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான பூக்கள், காய்கறிகள் விளைவதற்கும் அத்தியாவசியமானது. இன்றைய காலகட்டத்தில் அதிகப்படியான ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுகளையே நாம் அதிகம் உட்கொண்டு வருகிறோம்.
ரசாயன உரங்களால் பல தீமைகள் ஏற்படுகின்றன. மண்ணின் வளம் குறைந்துவிடுவது, நிலத்தடி நீர் மாசுபடுவது, நாம் உண்ணும் உணவில் நச்சுத்தன்மை கலப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இதனால் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருப்பதுதான் இயற்கை உரம் (Organic fertilizer).
இயற்கை உரம்
இயற்கை உரங்கள் என்பது தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுபவை. இலைகள், சமையலறை கழிவுகள், மாட்டுச் சாணம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி இந்த உரங்களை எளிதாக நாமே வீட்டிலேயே தயாரிக்கலாம். இது சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காது. அதே சமயம், மண்ணின் வளத்தை மேம்படுத்தி, நாம் விளைவிக்கும் பயிர்களுக்கு அதிக ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.
வீட்டிலேயே செலவில்லாமல் மண்புழு உரம் எப்படி தயாரிப்பது என்பது இங்கே.
ஒரு கலனில் அல்லது தொட்டியில் தோட்டக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், வீட்டில் உள்ள மற்ற மக்கக்கூடிய கழிவை போடவும். இவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும்.
கழிவு நன்றாக மக்கிய பிறகு, அதாவது 45-60 நாட்களுக்குப் பிறகு அவற்றில் மண்புழுக்களை விடவும். அதிலிருந்து 60 நாட்களில் கறுப்பு நிறம் கொண்ட மண்வாசனை நிறைந்த மண்புழு எரு தயாராகி விடும்.
உரம் தயாராகிவிட்டது என்பதற்கு அதன் வாசனை மாற்றம் முக்கியமானது. இதை செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். இதனால் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.