இதில் ஒட்ஸில் செய்ததா என்று ஆச்சரியப்படுவார்கள். மிகவும் சுவையா ரெசிபி இது.
தேவையான பொருட்கள்
1 கப் ஓட்ஸ்
1 ஸ்பூன் வெண்ணை
2 பூண்டு துருவியது
சின்ன துண்டு இஞ்சி துருவியது
பாதி வெங்காயம் நறுக்கியது
1 கேரட் நறுக்கியது
2 பீன்ஸ் நறுக்கியது
4 கப் தண்ணீர்
1 ஸ்பூன் மிளகு பொடி
உப்பு தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் சேர்த்து வறுத்துகொள்ள வேண்டும். இதை மிக்ஸியில் பொடியாக அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வெண்ணை சேர்த்து, இஞ்சி துருவியது, பூண்டு துருவியதை சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து வெங்காயம் நறுக்கியது, கேரட் நறுக்கியது, பீன்ஸ் நறுக்கியதை சேர்க்கவும். உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து கொள்ளவும். கொதிக்க வைக்கவும், அதில் ஓட்ஸை சேர்த்து கொள்ளவும். கடைசியாக மிளகு பொடி சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“