தோசை மற்றும் இட்லி மாவை அதிகம் புளிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தை பொறுத்தவரை, பொருட்களின் தன்மை மாறுவதற்குள் அதை நாம் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும்.
குறிப்பாக இட்லி மற்றும் தோசை மாவை நாம் 14 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் மாவு புளிக்காது என்று நினைக்கிறோம். ஆனால் இது புளிக்கும் வேகத்தை மட்டுமே குறைக்கிறது.
அதிகமாக புளிக்கவைக்கப்பட்டால் உடல்நல பாதிப்பு ஏற்படும். ஈஸ்ட் சேர்ந்த மாவை நாம் அதிக நேரம் புளிக்க வைத்தால், அதில் உள்ள சர்க்கரை எடுத்துக்கொண்டு, மாவின் தன்மையை அதன் வடிவமைப்பில் மாறுபாடு ஏற்படும்.
சோடா உப்பு பயன்படுத்தி புளிக்கவைக்கும்போது, அதிக நேரம் எடுத்தால், கேஸ் உற்பத்தியாகும். இது மாவின் தன்மையை மாற்றும். தோசை மாவு கெட்டுப்போய்விட்டது என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை தெரிந்துகொள்வோம்.
வழிமுறை?
நாற்றம் ஏற்படும், புளிப்பு சுவை அதிகரிக்கும். எண்ணெய் போன்ற படலம் மாவின் மேலே இருக்கும். இப்படி இருந்தால் நாம் மாவை பயன்படுத்தக் கூடாது.
மாவும் கெட்டுபோவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது. குறிப்பாக அதிக வெப்ப நிலையில் மாவை புளிக்கவைக்கும்போது கெட்டுப்போவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அதிக அளவில் உப்பு சேர்ப்பதால் நடைபெறலாம். மேலும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்காமல் விட்டுவிட்டால் ஏற்படலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“