Advertisment

நீரிழிவு நோய்க்கு அதிகப்படியான சிகிச்சை உடல் நலத்திற்கு கேடு - அமெரிக்க ஆய்வில் தகவல்

நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையளவு குறைவு ஏற்பட பல காரணங்கள் உள்ளன என்கிறார் மதுத்துவர் ரோஸலினா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
diabetes, lower blood sugar

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரை பிரச்னைக்கு, அதிகமாக சிகிச்சையளிப்பது தீங்கு விளைவிக்கும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான வயதான நோயாளிகளுக்கு மிகவும் தீவிரமாக சிகிச்சையளிக்கப்படுவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

இந்த ஆராய்ச்சி குழுவை, மாயோ க்ளினிக்கின், எண்டோக்ரினாலஜிஸ்ட் ரோஸலினா மெக்காய் வழி நடத்தியிருக்கிறார். அதிகப்படியான குளுக்கோஸை குறைப்பதற்காக, நோயாளிகள் தங்கள் ஹீமோகுளோபினின் ஏ1சி அளவை அடிப்படையாகக் கொண்டு தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையளவு குறைவு ஏற்பட பல காரணங்கள் உள்ளன என்கிறார் மதுத்துவர் ரோஸலினா. பல நீண்டகால பிரச்னைகளைக் கொண்டவர்களுக்கு இது பொதுவாக ஏற்படும். வயதானவர்களுக்கு, டைப் 1 நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதை இன்சுலின் அல்லது சல்போனிலூரியாஸ் போன்ற மருந்துகளால் சிகிச்சையளிக்கப்படுவதில் அதிக ரிஸ்க் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில சமயங்களில் ரத்தச் சர்க்கரைக் குறைவை தவிர்க்க முடியாது என்றாலும், பெரும்பாலான நேரங்களில் அவ்வாறு நடக்காமல் தடுக்க முடியும் என்கிறார்.

”இதற்கு முந்தைய ஆய்வில், குறைவான ரத்த சர்க்கரைக்காக அதிகப்படியான சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களை நாங்கள் தனியே பிரித்தோம். இந்த ஆய்வில், அதிகப்படியான சிகிச்சை தொடர்பான விளைவு தேசியளவில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய நாங்கள் விரும்பினோம்” என்கிறார் ரோஸலினா.

இந்த ஆய்வை நடத்துவதற்கு டாக்டர் ரோஸலினாவின் குழு தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையின் (2011–2014) ஆய்வு முடிவு மற்றும் ஆப்டம்லாப்ஸ் தரவு ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளது. தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை கணக்கெடுப்பின் தரவின்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10.7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வயது வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த நபர்களில் கிட்டத்தட்ட 22 சதவீதம் பேர் தீவிரமாக சிகிச்சை பெற்றிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

2011 மற்றும் 2014 க்கு இடையில் 2.3 மில்லியன் அமெரிக்கர்கள் மிகைப்படுத்தப்பட்ட அளவில் சிகிச்சை எடுத்துள்ளதாகவும், இவை ஆபத்தானவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதில் பிரச்னை அதிகமான நோயாளிகள், பிரச்னை குறைவான நோயாளிகள் என அனைவருக்குமே தீவிர சிகிச்சையளிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதை ஆங்கிலத்தில் படிக்க Diabetes overtreatment seriously endangers health, says study

Lifestyle Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment