பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் பெரும்பாலும் ஊட்டச்சத்து சக்தியாகக் கருதப்படுகின்றன. நல்ல கொழுப்பு, புரதம், வைட்டமின், தாது சத்துகள் உள்ளன. பலரும் இதை தினமும் சாப்பிடுகின்றனர். இருப்பினும், எந்தவொரு உணவைப் போலவே, அவற்றை அதிகமாக உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும்.
அதுபோல, நட்ஸ் வகைகளையும் அதிகம் எடுப்பது உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். இன்ஸ்டாகிராமில் சோமியா லுஹாடியா, ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில், நட்ஸ் ஆரோக்கியமான தின்பண்டங்களின் ஒரு பகுதி என்று நினைக்காதீர்கள்" என்று குறிப்பிட்டு வீடியோ பதிவிட்டுள்ளார்.
ஷிவானி பஜ்வா கூறுகையில், “அதிகமாக நட்ஸ் சாப்பிடுவது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். நட்ஸ் சத்தானவை மற்றும் நன்மை பயக்கும் கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் அதில் அதிகமான கலோரி இருப்பதால் உடல் எடை அதிகரிக்க கூடும் “என்று கூறியுள்ளார்.
அதிகப்படியான நட்ஸ் சாப்பிடுவது வயிற்று உப்புசம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பாதாம் மற்றும் முந்திரி போன்ற சில நட்ஸ்களில் ஆக்சலேட்டுகள் மற்றும் பைடேட்டுகள் உள்ளன, அவை தாது உறிஞ்சுதலைத் தடுக்கின்றன மற்றும் காலப்போக்கில் சிறுநீரக கல் உருவாவதற்கு பங்களிக்கின்றன என்று பஜ்வா மேலும் கூறினார்.
கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்
அதிகமாக நட்ஸ் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவையும் இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கும். நட்ஸ்களில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, அவை அளவாக உட்கொள்ளும்போது எல்டிஎல் (கெட்ட) கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன. அதிகப்படியாக சாப்பிடுவது எல்.டி.எல் கொழுப்பின் அளவை உயர்த்துவதற்கு பங்களிக்கும் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று மற்றொரு நிபுணர் நிஷா கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Overindulging in nuts can invite several health risks; here’s what experts want you to know
தினமும் எவ்வளவு சாப்பிடலாம்?
ஷிவானி பஜ்வா கூறுகையில், தினமும் 1 அவுன்ஸ், அதாவது ஒரு சிறிய கைப்பிடி அளவு அல்லது 28 கிராம் அளவிற்கு நட்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியமானது. இந்த அளவு சாப்பிடுவது நல்ல கொழுப்பு சத்து, புரதம், நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை சமநிலையில் உங்களுக்கு வழங்கும். இந்தஅளவு எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்காது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“