எடை குறைப்பு மாத்திரைக்கு அமெரிக்கா புதிய அங்கீகாரம்: நீரிழிவு நோயாளிகளின் கிட்னி பிரச்சனைக்கும் தீர்வு

எடை குறைப்பிற்காக பயன்படுத்தப்படும் மாத்திரை கடுமையான சிறுநீரக நோய்க்கும் பயன்படும் என பரிசோதனை முடிவுகள் கூறப்பட்ட நிலையில், அதற்கான ஒப்புதலை எஃப்.டி.ஏ வழங்கியுள்ளது.

எடை குறைப்பிற்காக பயன்படுத்தப்படும் மாத்திரை கடுமையான சிறுநீரக நோய்க்கும் பயன்படும் என பரிசோதனை முடிவுகள் கூறப்பட்ட நிலையில், அதற்கான ஒப்புதலை எஃப்.டி.ஏ வழங்கியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ozempic

நோவோ நார்டிஸ்க்கின் நீரிழிவு மற்றும் எடை இழப்பு மருந்தான Ozempic-கிற்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது. நோயாளிகளிடம் இதனை பரிசோதனை செய்ததில்  சிறுநீரக செயலிழப்பு மற்றும் நோய் முன்னேற்றத்தின் அபாயத்தைக் குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருதயம் தொடர்பான பிரச்சனைகளும் இதனால் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Now, weight loss drugs can control chronic kidney disease among people with diabetes: Why is the US FDA approval significant?

நீரிழிவு தொடர்பான நிலைமைகளை நிர்வகிப்பதில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். கடுமையான சிறுநீரக நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு வாரம் ஒருமுறை இந்த மருந்தை கொடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அதன் விளைவுகளையும் எஃப்.டி.ஏ ஆராய்ந்தது. அதன்படி, 1 mg Ozempic சிறுநீரக நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு (இறுதி நிலை சிறுநீரக நோய்) ஆகியவற்றின் அபாயத்தை 24 சதவீதம் குறைக்க வழிவகுத்தது. இது இருதய நோயால் ஏற்படும் இறப்பை 4.9 சதவீதம் குறைக்க வழிவகுத்தது.

நீரிழிவு நோய்க்கான ஃபோர்டிஸ் சி.டி.ஓ.சி மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் அனூப் மிஸ்ரா கருத்துப்படி, "நீரிழிவு நோயாளிகளில் கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்கள், சிறுநீரக நோய் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர். இவர்களுக்கு குறைவான அளவு சிகிச்சைகளே உள்ளன. இந்த ஒப்புதல் நீரிழிவு தொடர்பான சிக்கல்களை நிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. குறிப்பாக சிறுநீரக நோய் மற்றும் உடல் பருமன் ஆகிய இரண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது சிறுநீரக பாதிப்பு, உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும் மருந்து நம்மிடம் உள்ளது" என அவர் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

இந்த Ozempic அடுத்த ஆண்டு முதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “நீரிழிவு நோய், சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, இந்த மருந்து பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரச் சுமையை உருவாக்காமல் இருக்க இந்த தடுப்பு நடவடிக்கை மிகவும் முக்கியமானது" எனக் கூறப்படுகிறது.

- அன்கிதா உபத்யாய்

Simple ways to prevent kidney cancer Tips to keep your kidneys healthy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: