பாலக் கீரை பன்னீர் புலாவ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான அளவு
பாலக் கீரை – 1 கட்டு
பாஸ்மதி அரிசி – 1 கப்
பன்னீர் – ½ கப்
தேங்காய்ப் பால் – 1 கப்
வெங்காயம் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய், நெய் – தேவையான அளவு
சோம்பு – ½ டீஸ்பூன்
சீரகம்- ½ டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 2
மிளகு தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பாலக் கீரையை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யவும். அடுப்பில் பாத்திரம் வைத்து கீரை இலைகளை தனியாக எடுத்து போட்டு வேக வைக்கவும். பின்னர் கீரையை சிறிது நேரம் வைத்து ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். இப்போது மீண்டும் அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு, பிரிஞ்சி இலை, பன்னீர், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து ஊற வைத்த பாஸ்மதி அரிசி, அரைத்த பாலக்கீரை விழுது, தேங்காய்ப் பால் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு எடுத்தால் சுவையான, சத்தான பாலக் கீரை பன்னீர் புலாவ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“