Paavam Ganesan Pranika Dhakshu Health Tips Tamil News : டிக்டாக்கில் பிரபலமாகி, தற்போது பாவம் கணேசன் தொடர் வழியே மக்களை தினம் தினம் சந்தித்து வருகிறார் ப்ரனிகா. குறுகிய காலகட்டத்தில் வெள்ளித்திரை வரை வாய்ப்பு பெற்றிருக்கும் இவர், சமீபத்தில் தன்னுடைய ஸ்கின்கேர் சீக்ரெட்டுகளை பகிர்ந்துகொண்டார்.

“பொதுவாக மேக்-அப் போட்டால் சருமம் டேமேஜ் ஆகும் என சொல்லுவார்கள். அது மிகவும் தவறு. வெறும் சருமத்தில் வெளியே செல்லும்போதுதான் அதிகப்படியாக ஸ்கின் டேமேஜ் ஆகும். மேக்-அப் பாதுகாக்கவே செய்யும். அதுவுமில்லாமல், மேக்-அப் போட்டால் நிச்சயம் நம் முகத்தை நாம் க்ளென்ஸ் செய்வோம். அதுவே போதும். சருமம் ஆரோக்கியமாக இருக்கும். எதுமே இல்லையென்றாலும் வெறும் சருமத்தைவிட அதன்மேல் சாதாரண சன்ஸ்க்ரீன் போட்டுட்டு போனாலே போதும். சூரிய ஒளி டேமேஜிலிருந்து சருமம் பாதுகாப்பாக இருக்கும்.

நான் பெரும்பாலும் தக்காளி, தயிர், சர்க்கரை மற்றும் எலுமிச்சை ஒன்றாக சேர்த்து பேக் போல செய்து, இரவில் முகத்தில் அப்ளை செய்து, காலையில் கழுவுவேன். அல்லது, காலையில் அரைமணிநேரம் ஊறவைத்துக் கழுவுவேன். இது எனக்கு நல்ல மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. அதேபோல எப்போது வெளியே சென்று வந்தாலும், வந்ததும் சிறிதளவு தயிரை முகத்தில் அப்ளை செய்து, சிறிது நேரம் கழித்துக் கழுவினால், அன்றைக்கு இருக்கும் டேன் மறையும்.

எவ்வளவுதான் வெளிப்புறமாக ஏராளமான விஷயங்களை செய்தாலும்,நாம் உட்கொள்ளும் உணவுகளில் கவனம் செலுத்தவேண்டும். நான் எப்போதுமே எண்ணெய் பொருள்கள், ஃபாஸ்ட் ஃபுட் ஆகியவற்றை உட்கொள்ளவே மாட்டேன். பிட்சா, பர்கர் எல்லாம் சாப்பிட்டதே இல்லை. பிரியாணிகூட எப்போதாவதுதான் சாப்பிடுவேன். எனக்கு மிகவும் பிடித்த உணவுகள் தயிர் சாதமும் ரசம் சாதமும்தான். அதேபோல ஜூஸ் நிறையக் குடிப்பேன்.
வெறும் வயிற்றில் மாதுளை ஜூஸ், பிறகு 11 மணி போல் ABC ஜூஸ், மாலையில் நெல்லிக்காய் ஜூஸ், இரவு தூங்குவதற்கு முன்பு சிவப்பு கொய்யப்பழ ஜூஸ் என இதுபோன்ற ஜூஸ் வகைகளை உட்கொள்வேன். அதனோடு, பாதாம், டேட்ஸ் உள்ளிட்ட பிற நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். இந்த வெயிலுக்கு வெள்ளரிக்காய் உட்கொள்வது மிகவும் நல்லது. அதனை அப்படியே சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காது. அவர்கள், வெள்ளரி தோலை நீக்கி அதனைத் துண்டு துண்டாக அறிந்து, அதனோடு சிறிதளவு மிளகுத்தூள், தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து சாலட் போல சாப்பிடலாம்.

வெளியே அதிகமாக வாங்கி சாப்பிடுகிறவர்களுக்கு அடிக்கடி வயிற்றெரிச்சல் ஏற்படும். அவர்கள் எப்போதும் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உட்கொள்ளலாம். தொடர்ந்து இப்படி சாப்பிட்டு வந்தால் நிச்சயம் வயிறு சுத்தமாகும். அதேபோல நன்றாகத் தூங்குவதும் அவசியம்”.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil