விஜய் டிவியில் நல்ல டிஆர்பியில் சென்று கொண்டிருக்கும் சீரியல் பாவம் கணேசன். இந்த தொடரில் நாயகன் நவீனின் அம்மாவாக நடித்து வருபவர் சொர்ணம். இவரது நிஜப்பெயர் அனிலா ஸ்ரீகுமார். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர். இவர் ஒரு பாரம்பரிய நடன கலைஞர். தனது மூன்று வயதில் இருந்து கிளாசிக்கல் டான்ஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார். இப்போ டான்ஸ் மாஸ்ட்ராக 25 மாணவர்களுக்கு நடன பள்ளி மூலம் பயிற்சி கொடுத்து வருகிறார். கணவர் ஸ்ரீகுமார், புரொடக்ஷன் கம்பெனி வைத்துள்ளார்.
14 வயதிலேயே நடிக்க தொடங்கியுள்ளார். 1992ல் மலையாள சினிமாவில் தான் முதல் என்ட்ரி. சர்கம் என்ற படத்தில் நடித்தார். பிறகு பரிநாயம், சாந்தா, நிஞ்சனு பார்ட்டி போன்ற பல மலையாள திரைப்படங்களில் நடித்தார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே சின்னத்திரையில் அறிமுகமானார். 1995ஆம் ஆண்டு டிடி மலையாளத்தில் குளம் என்ற சீரியலில் நடித்தார். தொடர்ந்து காந்தர்வயாமம், திரௌபதி, வம்சம், கார்த்திகா போன்ற பல தொடர்களில் நடித்தார். சீரியல்களில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியதால் சின்னத்திரையில் கவனம் செலுத்த துவங்கினார்.
பிறகு சூர்யா டிவி, ஏசியாநெட், அமிர்தா டிவி பல சேனல்களில் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தார். மலையாள சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். திரைத்துறையில் அறிமுகமானாலும் சின்னத்திரையில்தான் அதிகம் பிரபலமானார். தமிழில் முதன் முதலில் களத்து வீடு என்ற சீரியலில் நடித்துள்ளார். ஆனால் அது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பிறகு கிடைத்த வாய்ப்புதான் விஜய் டிவியின் சின்னத்தம்பி சீரியல். 2017ல் ஒளிபரப்பான இந்த தொடர் இவருக்கு மிகப் பெரிய ரீச் கொடுத்தது.
சின்னத்தம்பி தொடரில் அன்னலெட்சுமி கதாபாத்திரத்தில் கனீர் குரல், மிரட்டும் கண்கள் என கெத்தாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். பாசமான அம்மாவாகவும், மாமியாராகவும் நடிப்பில் கலக்கினார். இல்லத்தரசிகள் மத்தியில் இவரது அன்னலட்சுமி கேரக்டர் ரொம்பவே ரீச் ஆனது. தொடர்ந்து காற்றின் மொழி சீரியலில் கண்மணியின் அம்மாவாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவர் நடித்த இரண்டு தமிழ் சீரியலுமே பயங்கர ஹிட் ஆனது. தற்போது பாவம் கணேசன் சீரியலில் சொர்ணம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நாயகன் நவீனின் அம்மாவாக நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.
திருமணத்துக்கு பிறகு திருவனந்தபுரத்தில் செட்டில் ஆகியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். பல நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். 1996ல் சீரியலுக்கான க்ரிட்டிக்ஸ் விருது, 1999ல் கேரள மாநில விருது என பல விருதுகள் வாங்கியுள்ளார். 2018ல் சின்னத்தம்பி சீரியலில் நடித்ததற்காக சிறந்த அம்மாவிற்கான விருது வாங்கியுள்ளார். 2019ல் சிறந்த மாமியாருக்கான விருது வென்றார். சின்னத்திரையில் கிடைத்த பாப்புலாரிட்டி வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil