Advertisment

தமிழர்களுக்கு இது உண்மையாகவே பெருமையான தருணம் தான்.. மதுரை சின்னப்பிள்ளை, பங்காரு அடிகளார் என 7 தமிழர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது!

தனித்தனி சிறப்பு குறிப்புகள் இதோ உங்களுக்காக

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
padma shri awards

padma shri awards

நாட்டின் உயரிய விருதுகளாக கருதப்படும் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகள் நேற்று (25.1.19) மாலை அறிவிக்கப்பட்டன. 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது, 14 பேருக்கு பத்ம பூஷன் விருது , 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல், பங்காரு அடிகளார், சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, நர்த்தகி நட்ராஜ், மருத்துவர் ஆர்.வி.ரமணி மற்றும் டிரம்ஸ் சிவமணி,மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி என தமிழகத்தை சேர்ந்த மொத்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 7 பேர் பற்றியும் தனித்தனி சிறப்பு குறிப்புகள் இதோ உங்களுக்காக..

publive-image ஷரத் கமல்

டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல்:

சென்னையை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமலுக்கு பதம் ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியப் போட்டிகள் தொடங்கி காமன்வெல்த் விளையாட்டில் 3 பதக்கம் வென்ற தமிழகத்தை வீரர் என பல பாராட்டுக்களை பெற்ற ஷரத் கமலுக்கு அவரை பாராட்டும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

publive-image பங்காரு அடிகளார்

பங்காரு அடிகளார் :

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளாருக்கு பதம் ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்மிக இயக்க தலைவரான பங்காரு அடிகளார் சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

publive-image மதுரை சின்னப்பிள்ளை

சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் -யால் பெரிதும் மதிக்கப்பட்ட பெண்மணி. கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டிய மதுரை சின்னப்பிள்ளைக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சுயஉதவிக்குழுக்களுக்கான அடையாளமாக தற்போதும் திகழ்கிறார்.

publive-image நர்த்தகி நட்ராஜ்

நர்த்தகி நட்ராஜ் :

வேதனைகளை சாதனைகளாக மாற்றிய திருநங்கை நர்த்தகி நட்ராஜ் பதம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார். நடனத்தின் மீதுக் கொண்ட தீராத காதல் காரணமாக நடன பள்ளியை தொடங்கி அதன் மீது பரத கலையை வளர்த்து வருகிறார். திருநங்கைகளில் முதன்முறையாக பாஸ்போர்ட் பெற்றவர், கலைமாமணி, தேசிய விருது பெற்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான நர்த்தகி நட்ராஜ்க்கு பதம் ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

publive-image மருத்துவர் ஆர்.வி.ரமணி

மருத்துவர் ஆர்.வி.ரமணி :

கோவையை சேர்ந்த மருத்துவர் ஆர் வி ரமணிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. நோயாளியிடம் இருந்து 50 பைசாவை பெற்றுக் கொண்டு மருத்துவம் பார்த்தார். பின்னர் படிப்படியாக முன்னேறி கடந்த 1985-ஆம் ஆண்டு சங்கரா கண் அறக்கட்டளையை தொடங்கினார்.சங்கரா கண் அறக்கட்டளையின் கீழ் இந்தியா முழுவதும் கோவை, பெங்களூரு, குண்டூர், சிமோகா, லூதியானா, விஜயவாடா ஆகிய 6 இடங்களில் 10 மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனையில் கிராமப்புறங்களில் இருந்து வரும் நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்கு இலவசமாக வைத்தியம் பார்க்கப்படுகிறது. மருத்துவ துறையில் இவர் செய்து வரும் சேவைக்காக ஆர்.வி.ரமணிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ஸ் சிவமணி:

திரைப்பட இசை வாத்திய கலைஞர் ஆவார். இவர் டிரம்ஸ் சிவமணி என்ற பெயரால் அனைவராலும் அறியப்படுகிறார். தனது டிரம்ஸ் மீது அவர் கொண்ட காதல் அவரின் ரசிகர்களுக்கு நன்கு தெரியும். இடைவிடாமல் டிரம்ஸ் வாசிப்பு, தொடர்ந்து 24 மணி நேர டிரம்ஸ் வாசிப்பு என இவர் செய்த சாதனைகள் ஏகப்பட்டது. இவை அனைத்தையும் பாராட்டும் விதமாக பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

publive-image மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி

மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி :

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவரான இவர், 1951-ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தார். முதன்முதலாக ஸ்டான்லி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தொடங்கினார். இவர் மருத்துவ அறிவியலின் தேசிய அகாதெமியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். இவரின் சேவையை பாராட்டும் வகையில் பதம்ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபு தேவா, கவுதம் கம்பீருக்கு பத்மஸ்ரீ விருது! விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்ம பூஷண்

Padma Bhushan Award
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment