பூஜா பிள்ளை
புதுடெல்லியில் உள்ள பத்மநாபம் உணவகத்தின், உன்னதமான தென் இந்திய டிபன் வகைகள் மனதை ஈர்க்கும் வகையில் உள்ளன.
டெல்லியில் உள்ள புதிய தென் இந்திய ரெஸ்டாரெண்ட், நிறைய நல்ல விஷயங்களைக் கொண்டுள்ளது. உதாரணத்துக்கு அங்கு விற்கப்படும் ரசம், மிகச்சிறப்பான ஒன்றாக இருக்கிறது. ஜன் பத்தில் உள்ள பத்மநாபம் நோக்கி நாங்கள் போகும்போது, குளிர்காற்று வீசும் மாலைப்பொழுதில் நமக்கு தேவையானதாக, துல்லியமான, சூடான ரசமாக புளி, பெருங்காயம் கலந்த கலவையாக மட்டும் அல்லாமல் அதீத சுவையுடன் இருக்கிறது. வேறு இதர இடங்களில் இதுபோன்ற சுவையை காணமுடியவில்லை. இது எங்களுக்கு, சூடான, மொறு, மொறுப்பான மெது வடையுடன் சேர்த்துப் பரிமாறப்படுகிறது. நாங்கள் முழுவதுமாக அதனை தொண்டைக்குள் விழுங்கினோம். உணவுக்கான நல்ல தொடக்கமாக அது இருந்தது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தொடர்ந்து சின்ன பொடி இட்லிகள் வந்தன(சிறிய இட்லிகள் மிளகாய்பொடியுடன் பரிமாறப்பட்டது). இட்லிகள் நன்றாக இருந்தன. ஒரு தென்இந்தியரின் வீட்டுக்கு வெளியே மிகவும் நேர்த்தியான, மெத்தென்று இருக்கும் இது போன்ற இட்லிகளை வாங்குவது சாத்தியமில்லை. இட்லியோடு பொடியும் இருந்தது. பார்ப்பதற்கு முரண் போல தோன்றியது. ஆனால், சிறந்த பொடிகள் எப்போதுமே வாயில் ஒரு வித உணர்வை ஏற்படுத்தும். இட்லி அல்லது செட் தோசையின் மென்மையை ஈடு செய்யும் ஒரு விளைவை ஏற்படுத்தும். ஆனால், பத்மநாபத்தில் எங்களுக்கு வைக்கப்பட்ட பொடி நன்றாக இல்லை. இந்த விஷயத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் கூட உணவகத்தில் பரிமாறப்பட்ட பொடி இட்லிகள் சுவையானதாக இல்லை.
குறிப்பாக இது பத்மநாபம் உணவகத்தின் வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி அளிக்கும். இந்த உணவகத்துக்கு அருகில் இருக்கும் சரவணபவன் உணவகம் டெல்லிக்கு கற்றுக் கொடுத்த மிளகாய்பொடி போன்ற விஷயங்களைப் பாராட்ட வேண்டும். எனினும், உணவு மற்றும் சேவை தரத்தில் கடுமையான வீழ்ச்சிகாரணமாக அந்த உணவகம் கடுமையாக விமர்சிக்கவும் பட்டது இந்த உணவகம். ஆனால், சில விஷயங்களில் எப்போதும் சரியானதை பெற முடியும். அதில் ஒன்றுதான் மிளகாய்பொடி. இன்னொன்று ஃபில்டர் காஃபி. ஆனால், இது பதம்நாபத்தில், மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. பால் அதிகம் கலந்து நமக்குத் தரப்படும் இந்த பானம், சரவணபவனில் பரிமாறப்படும் காஃபிக்கு நிகராக இல்லை. கேசரி பாத் பற்றி பேச விரும்பவில்லை. அதில் இனிப்பு தவிர வேறு ஒன்றும் இல்லை.
ஆனால், இந்த மதிப்பீட்டின் தொடக்கத்தில் கூறியபடி, பத்மநாபம் இதர நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கிறது. செட்டிநாடு மசாலா தோசைக்கான உருளைக்கிழங்கு மசாலா, சரவணபவனோடு கூட ஒப்பிடமுடியாத அளவுக்கு நன்றாக இருக்கிறது. சாம்பார் அருமையாக இருக்கிறது. சட்னி வகைகள் புதியதாக அருமையாக இருக்கின்றன. சட்னி எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது. தயிர்சாதம் இனிமையாக இருக்கிறது. அதே போல நெய் பொங்கலும் (இந்த இரண்டும் அப்பளங்களோடு பரிமாறப்பட்டிருக்க வேண்டும்) அதே ருசியுடன் இருக்கிறது. நாங்கள் மாலையில் சென்றதால், மதிய உணவு சாப்பிட முடியவிலை. தளி பாணியில் ஒவ்வொரு நாளும் மதிய உணவு பரிமாறப்படுகிறது. வாரத்தின் நாட்களைப் பொறுத்து அது கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா அல்லது கர்நாடகா உணவாக இருக்கிறது. மீண்டும் பத்மநாபத்துக்கு வரவேண்டும் என்றால், இதற்காகத்தான் இருக்கும். டிபன் உணவுகளுக்கான தேவை இங்கில்லை.
முகவரி; பத்மநாபம். 52, ஜன்பத், கண்ணாட் பிளேஸ், டெல்லி. விலை இரண்டு பேருக்கு ; ரூ.800