மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலி, குமட்டல் சரியாக… இந்த கீரையின் சாறை தேன் கலந்து சாப்பிடுங்க; மருத்துவர் கௌதமன்
வல்லாரை தரும் பயன்கள் என்னென்ன?வல்லாரை எந்தெந்த உடல்நல பிரச்னைகளை சரிசெய்கிறது? வல்லாரை எடுத்துக்கொள்ளும் முறைகள் என்னென்ன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் மருத்துவர் கௌதமன்.
வல்லாரை தரும் பயன்கள் என்னென்ன?வல்லாரை எந்தெந்த உடல்நல பிரச்னைகளை சரிசெய்கிறது? வல்லாரை எடுத்துக்கொள்ளும் முறைகள் என்னென்ன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் மருத்துவர் கௌதமன்.
மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலி, குமட்டல் சரியாக… இந்த கீரையின் சாறை தேன் கலந்து சாப்பிடுங்க
மூலிகை என்ற பெயர் நம் மனதில் ஏற்பட்டாலே நம் மனதில் முதலில் நினைவிற்கு வருவது வல்லாரைதான் ஆகும். தமிழ் சார்ந்த, தமிழ் கலாச்சாரம் சார்ந்த சமூகங்களில் வல்லாரை என்பது ஒரு மிகப்பெரிய நீங்கா இடம்பிடித்து இருக்கக்கூடிய ஒரு அழகான மூலிகையாகும். வல்லாரை மருந்தாக இருந்தாலும் கூட வல்லாரையை ஒரு கீரையாக, உணவாக தொன்றுதொட்டு பயன்படுத்தி வருகின்ற ஒரு சமூகம் அது நிச்சயமாக நம் தமிழ் சமூகம்தான் என்று நாம் சொல்ல முடியும்.
Advertisment
வல்லாரை சாப்பிட்டால் ஞாபக சக்தி, அறிவுக்கூர்மை, மூளை வளர்ச்சி இருக்கும் அப்படின்னு நம்ம யோசிப்போம். ஆனால், வல்லாரை வெறும் மூளை சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டும் கிடையாது. வல்லாரை ஒரு காயகல்ப மூலிகை. வல்லாரை தரும் பயன்கள் என்னென்ன?வல்லாரை எந்தெந்த உடல்நல பிரச்னைகளை சரிசெய்கிறது? வல்லாரை எடுத்துக்கொள்ளும் முறைகள் என்னென்ன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் மருத்துவர் கௌதமன்.
வல்லாரை தலைமுடியை வளமையாக இளமையாக கருமையாக வைத்திருப்பதற்கு இந்நிகழ்ச்சியை மருந்து சொல்லலாம் தலைமுடி சம்பந்தப்பட்ட எண்ணெயை நீங்கள் வாங்கி உபயோகப்படுத்தினாலும் அதில் இருக்கக்கூடிய மூலக்கூறுகள் என்ன மூலிகைகள் என்னன்னு படிச்சு பாத்தீங்கன்னா அதுல நிச்சயமாக வல்லாரை இருக்கிறது நம்ம பார்க்க முடியும் நல்ல
ஒரு கைப்பிடி அளவு வல்லாரை எடுத்து நன்கு அரைத்து தலை முழுவதும் தேய்த்து, ஒரு மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒருநாளைக்கு இவ்வாறு செய்வதால், தலைமுடி அடர்த்தியாக கருமையாக மாறும். பொடுகு, பேன் தலையில் ஏற்படும் அரிப்பு, வறட்சி அனைத்தும் மறைந்து போகும் என்கிறார் மருத்துவர் கௌதம்.
Advertisment
Advertisements
கண்கள் வறட்சி, நீராத நிறக்குருடு நோய்க்கு வல்லாரை சாறு மிகப்பெரிய மருந்து. காலையில் எழுந்த உடனேயே 30 மில்லி அளவுக்கு வல்லாரை சாறு எடுத்து தேன் கலந்து ஒருமண்டலம் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதனால், கண்ணின் ஒளி கூடுவதைக் காண முடியும். 48 நாட்களுக்குப் பிறகு வாரம் ஒரு வேளை (அ) 2 வேளை சாப்பிட்டு வரும்போது கண்களது வறட்சி குறைந்து, கண் ஒளி கூடும் என்கிறார் மருத்துவர் கௌதம்.
நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமானது வல்லாரை. 2-ம் உலகப்போரின்போது ஏற்பட்ட நோய்களுக்கு வல்லாரையில் இருந்து எடுக்கப்பட்ட மருந்து தொற்றுக்களையும் மரணத்தையும் நீக்க உதவியது. அந்த அளவுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்து வல்லாரை. இதனை நேரடியாகவோ (அ) உணவாகவோ நாம் எடுத்துக் கொள்ளும்போது நோய் எதிர்ப்பு சக்தியில் மிகப்பெரிய மாற்றம் உருவாகிறது என்கிறார் மருத்துவர் கௌதம்.
ஒவ்வாமை தும்மல் ஏற்படுவது, மூக்கில் தண்ணீர் வடிவது, ஒருநாள் ஹோட்டல் உணவு சாப்பிட்ட உடனேயே ஒவ்வாமை ஏற்படுவது, ஊதுபத்தி வாசனை தொந்தரவு, இதை மாற்றக்கூடிய சக்தி வல்லாரைக்கு உண்டு. எந்த விதமான ஒவ்வாமையாக இருந்தாலும் சுற்றுப்புற சூழல் இருக்கக்கூடிய ஒவ்வாமை, நம்முடைய உணவு சார்ந்த ஒவ்வாமை, வேலை செய்யக்கூடிய இடங்களில் இருக்கக்கூடிய சிறுசிறு வேதியியல் அமிலங்கள் சார்ந்த ஒவ்வாமை அனைத்தையுமே மாற்றக் கூடிய சக்தி வல்லாரைக்கு கூண்டு. வல்லாரைக் கீரை வாரம் இரு வேளை உணவில் சேர்க்கும்போது ஒவ்வாமை சார்ந்த காரணிகள் மிகப்பெரிய அளவில் மறைந்து போகிறது என்கிறார் மருத்துவர் கௌதம்.
இளம்பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் முதல்நாள் தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி-மயக்கம் ஏற்படுவது போன்ற பிரச்னை இருக்கக்கூடிய பெண்கள், வல்லாரை சாறு 30 மில்லி தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டு,. தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி மயக்கம் அடிவயிற்றில் ஏற்படுகின்ற வலிகள், குடல் முறுக்கி முறுக்கி ஏற்படக்கூடிய வழிகள் மிகப்பெரிய அளவில் குணமாகும் என்கிறார் மருத்துவர் கௌதம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.